பெங்களூர் கலவரத்தின்போது கே.பி.என் டிரைவர்களை உயிரோடு எரிக்க முயற்சி! விசாரணையில் ஷாக்
பெங்களூர்: காவிரி தொடர்பாக பெங்களூரில் கடந்த 12ம் தேதி, திங்கள்கிழமை நடைபெற்ற வன்முறையின்போது, பெங்களூர் டிசோசா நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கேபிஎன் டிராவல்ஸ் நிறுவனத்தின் 42 பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.
இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த இளைஞர்கள் போலீசில் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், அக்கலவர பின்னணியில் ஒரு பெண் இருந்தது தெரியவந்துள்ளது.

இதனிடையே பஸ்சுக்குள் படுத்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்த டிரைவர்கள் நல்லவேளையாக காயமின்றி தப்பி வெளியே ஓடிவந்துள்ளனர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர்.
தீ வைப்பு சம்பவம் மாலை 4 மணியிலிருந்து 4.30க்குள் நடந்துள்ளது. 22 டிரைவர்களும், 2 கிளீனர்களும், ஸ்லீப்பர் கோச் பஸ்களுக்குள் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர். இரவில் பணியாற்ற வேண்டும் என்பதால் அவர்கள் அயர்ந்து தூங்கியுள்ளனர்.
அந்த நேரத்தில் திடீரென, ஒரு கும்பல் வந்து, பஸ்கள் மீது டீசல் ஊற்றுவதை உணர்ந்து தூங்கிக்கொண்டிருந்த டிரைவர்களும், கிளீனர்களும் அலறியடித்து ஓடியுள்ளனர். அப்போது கும்பலை சேர்ந்த சிலர், தப்பியோடிய டிரைவர்கள் சிலர் மீது டீசலை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளனர். அதிருஷ்வசமாக அனைவரும் தப்பியோடிவிட்டனர்.
எனவேதான், போலீசார், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி வழக்கையும் சேர்த்து பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும் பெங்களூர் போலீசார் போட்டுள்ள வழக்குகள் இவைதான்: ஐபிசி பிரிவு 307-கொலை முயற்சி, ஐபிசி 143-சட்டவிரோதமாக கூடுவது, ஐபிசி 147-கலவரம், ஐபிசி-148, பயங்கர ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டது, ஐபிசி 324-தெரிந்தே பிறரை ஆயுதங்கள் கொண்டு காயப்படுத்த முயற்சிப்பது, ஐபிசி 427-சேதம் விளைவிப்பது, நெருப்பு அல்லது வெடிபொருட்கள் கொண்டு சேதம் விளைவிப்பது மற்றும் சொத்து நாசம் தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகளை போட்டு நெருக்கடி கொடுத்துள்ளனற் போலீசார்.
கைது செய்யப்பட்டடவர்கள், கெம்பேகவுடா 28, சதீஷ் 27, பிரகாஷ் பெட்டையா 46, சந்திரன் 19, ரக்ஷித் 19, கிரன் கவுடா 27, லோகேஷ் மூர்த்தி 25 ஆகும்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications