நழுவிய செல்போனை பிடிக்க முயன்றபோது கால் தவறி மாடியில் இருந்து விழுந்து இளம்பெண் பலி
மும்பை: மும்பையில் செல்போன் கீழே விழுந்தபோது அதை பிடிக்க முயன்ற இளம்பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள தாகூர் மாலில் சேல்ஸ் கேர்ளாக வேலை பார்த்தவர் ராஜ்ஸ்ரீ ஜாதவ்(18). அவர் அதே பகுதியில் உள்ள ககன்கிரி அபார்ட்மென்ட்டில் தனது பெற்றோருடன் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 8.45 மணி அளவில் ராஜ்ஸ்ரீ மாடியில் செல்போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தந்தை சந்தேஷ் என்ன எப்பொழுது பார்த்தாலம் செல்போனும் கையுமாக இருக்கிறாய் என்று திட்டிவிட்டு சென்றுள்ளார். மீண்டும் 10 நிமிடத்தில் வந்த அவர் ராஜ்ஸ்ரீயை சாப்பிட வருமாறு அழைத்துள்ளார்.
சந்தேஷ் வீட்டுக்குள் சென்றதும் ராஜ்ஸ்ரீயின் செல்போன் கை நழுவி கீழே விழுந்துள்ளது. அதை பிடிக்க முயன்றபோது அவர் நான்கு மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிர் இழந்தார்.












Click it and Unblock the Notifications