மோடி, ஆதித்யநாத் பயன்படுத்திய உடைகள் விற்பனைக்கு.. அமேசானில் களமிறங்கும் ஆர்எஸ்எஸ்!
பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயன்படுத்திய பொருட்களை இணையத்தில் விற்க போவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயன்படுத்திய பொருட்களை இணையத்தில் விற்க போவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தீன் தயாள் தாம் என்ற நிறுவனம் மதுராவில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சொந்தமானது ஆகும்.
இந்த நிலையில் இந்த நிறுவனம் அமேசானில் சில முக்கியமான பாரம்பரிய பொருட்களை விற்க இருக்கிறது. அதன் ஒரு பகுதியாக மோடி பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.

பொதுவாக மருந்து
இந்த நிலையில் இந்த நிறுவனம் முதலில் மருந்துகளையும் சாதாரண பொருட்களையும் இணையத்தில் விற்க போவதாக கூறியுள்ளது. அதன்படி அமேசான் இணையத்தில் சோப், பேஸ்ட், பிரஷ் ஆகியவற்றை இந்த நிறுவனம் விற்க இருக்கிறது. அதை வைத்து இணைய வியாபாரம் எப்படி இருக்கிறது என்று பார்க்க போகிறது.

கோமிய பொருட்கள்
அதன்பின் கோமியத்தை விற்க போகிறது. வெறும் கோமியம் மட்டுமில்லாமல் கோமியத்தில் செய்யப்பட்ட ஜூஸ், அதில் செய்யப்பட பேஸ்ட், சாணியில் செய்யப்பட்ட சோப், முக கிரீம் ஆகியவற்றை விற்க இருக்கிறது. அமேசானில் இது எல்லாம் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நேரடியாக வாங்குவார்கள்
இதை கிராமத்தினர்களிடம் இருந்து நேரடியாக வாங்க இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதாவது கிராமத்தில் மாடு வைத்து இருப்பவர்கள் இதனால் பயன் அடைவார்கள் என்றுள்ளது. பாரம்பரியம் வளரும். நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.

குர்தா
அது மட்டுமில்லாமல் பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பயன்படுத்திய குர்தா மாடலில் ஆடை விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 10 மாடல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அவர்கள் இதற்கு முன் பயன்படுத்த ஆடைகள், கர்சீப்புகளை விற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications