22 இணை அமைச்சர்களும் ஒதுக்கப்பட்ட துறைகளும்- முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இணை அமைச்சர்களுக்கான இலாக்காக்களை ஒதுக்கியுள்ளார்.

நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் பதவியேற்றுக் கொண்ட 22 இணை அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் இன்று அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இது குறித்த அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை இன்று காலை வெளியிட்டது.

Modi allots Portfolios for Ministers of State

அதன் விவரம் வருமாறு,

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு)

ஜெனரல் வி.கே. சிங் - வடகிழக்கு பகுதி மேம்பாடு (தனி பொறுப்பு), வெளியுறவுத் துறை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை

இந்தர்ஜித் சிங் ராவ் - திட்டம் (தனி பொறுப்பு), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை (தனி பொறுப்பு), பாதுகாப்புத் துறை

சந்தோஷ் குமார் கங்வார் - ஜவுளி (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரத் துறை, நீர்வளம், நதிகள் மேம்பாடு மற்றும் கங்கை சுத்தப்படுத்தும் துறை

ஸ்ரீபத் நாயக் - கலாச்சாரம் (தனி பொறுப்பு), சுற்றுலா (தனி பொறுப்பு)

தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியத் துறை (தனி பொறுப்பு)

சர்பானந்தா சோனோவல் - திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை, இளைஞர்கள் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை (தனி பொறுப்பு)

பிரகாஷ் ஜாவேத்கர் - தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு துறை (தனி பொறுப்பு), சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் (தனி பொறுப்பு), நாடாளுமன்ற விவகாரத் துறை

பியூஷ் கோயல் - மின்சாரத் துறை (தனி பொறுப்பு), நிலக்கரி துறை (தனி பொறுப்பு), எரிசக்தி துறை (தனி பொறுப்பு)

ஜித்தேந்திர சிங் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு), புவி அறிவியல் துறை (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஆட்சிப் பணியாளர், பொதுக் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி ஆய்வு துறை

நிர்மலா சீதாராமன் - வணிகம் மற்றும் தொழில்துறை (தனி பொறுப்பு), நிதி மற்றும் நிறுவன விவகாரத் துறை

இணை அமைச்சர்கள்

சித்தேஸ்வரா - விமான போக்குவரத்து துறை

மனோஜ் சின்ஹா - ரயில்வே துறை

நிஹால் சந்த் - ரசாயனம் மற்றும் உரத் துறை

உபேந்திர குஸ்வாஹா - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ், குடிநீர் மற்றும் வடிகால் துறை

பொன். ராதாகிருஷ்ணன் - கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் துறை

கிரண் ரிஜ்ஜு - உள்துறை

க்ரிஷன் பால் - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, கப்பல் போக்குவரத்து துறை

சஞ்சீவ் குமார் பால்யான் - விவசாயம், உணவு பதப்படுத்துதல் துறை

மன்சுக்பாய் தன்ஜிபாய் வசாவா - பழங்குடியின நலத்துறை

ராவ்சாகேப் தாதாராவ் தான்வே - நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொதுவினியோகத் துறை, சுரங்கம், எஃகு, தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு துறை

சுதர்ஷன் பகத் - சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+