பாஜக பிரதமர் வேட்பாளர் மோடி பிரமாதமா சமைப்பாராம்...
வாரணாசி: பாஜக பிரதமர் வேட்பாளாரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி பிரமாதமாக நீந்துவார், நன்றாக சமைப்பார் என அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடியின் தம்பிகளில் ஒருவரான பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி, குஜராத் நியாயவிலை கடைகள் மற்றும் மண்எண்ணெய் விற்பனை உரிமம் பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர்.
வாரணாசியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் பிரகலாத். அப்போது அவர் தன்னை விட இரண்டு வயது மூத்த தனது அண்ணன் நரேந்திர மோடி பற்றிய சில சுவாரசியமான மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது :-

சமைத்துக் கொடுப்பார்....
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது எனது தாயார் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்வார். அவர் வீட்டில் இல்லாத சில சமயங்களில் எனது அண்ணன் மோடிதான் எனக்கும், வீட்டில் உள்ள மற்ற சகோதரர்களுக்கும் சமைத்து கொடுப்பார்.

பிரமாதமாக நீந்துவார்....
அவ்வப்போது சமையல் செய்யும் அவர், பின்னர் நன்றாக சமைக்க கற்றுக்கொண்டார். மேலும் மோடிக்கு நீச்சல் அடிக்கவும் தெரியும். பிரமாதமாக நீந்துவார்.

நேர்த்தியான உடைகள்...
எப்போதும் தூய்மையாகவும், நேர்த்தியாகவும் உடை அணிவதை மோடி விரும்புவார்.

சிறந்த பிரதமராவார்....
மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவரான மோடி பிரதமரானால் தனது பணிகளை நல்ல முறையில் செய்து சிறந்த பிரதமர் என பெயர் எடுப்பார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications