குஜராத்தில் ரூ1000க்கு விற்பனையாகும் ‘மோடி பிராண்ட்’ பட்டாசுகள்
அகமதாபாத் : தீபாவளிக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் குஜராத்தில் ‘மோடி' பட்டாசுகள் விற்பனை அமோகமாக உள்ளதாம்.
தீபாவளி என்றாலே புத்தாடைகள், பட்சணங்கள், பட்டாசுகள் எனக் களை கட்டும் கொண்டாட்டங்கள். ஆண்டுதோறும் சூழ்நிலைக்குத் தக்க வாறு பண்டிகைக் கொண்டாட்டங்களில் புதுமைகளைப் புகுத்தி வியாபாரத்தைப் பெருக்குவது வியாபாரிகளின் யுக்தி.
அந்தவகையில் இந்த வருடம் குஜராத்தில் அறிமுகமாகியுள்ள ‘மோடி' பட்டாசிற்கு மக்களிடையே ஆதரவு அமோகமாக உள்ளதாம்.

மோடி புகழ்...
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளாருமான நரேந்திர மோடிக்கு அரசியலில் உருவாகியுள்ள செல்வாக்கைப் போலவே பொதுமக்களின் பண்டிகைக் கொண்டாட்டங்களிலும் பங்களிப்பு பெருகி வருகிறது.

பேஷன் ஐகான்...
அந்தவகையில், சமீபத்தில் கொண்டாடப்பட்ட தசரா கொண்டாட்டங்களின் போது, மோடி டாட்டூஸ், மோடி குர்தா, மோடி சட்டை, மோடி சேலை என குஜராத்தின் பேஷன் சிட்டியான அகமதாபாத்தில் பேஷன் ஐகான் ஆனார் மோடி.

டாட்டூஸ்...
கிட்டத்தட்ட 30,000 டாட்டூக்கள் மோடியின் உருவப் படத்தை வைத்து தயாரிக்கப் பட்டு சந்தையில் வியாபாரம் செய்யப் பட்டதாம்.

ஆடைகள்...
மோடி ஆதரவாளர்கள் சிலர் ‘மோடி லாவோ... தேஷ் பச்சாவோ...' அதாவது, ‘மோடியைக் கொண்டு வாங்க...நாட்டைக் காப்பாத்துங்க..' என எம்பிராய்டரி செய்யப் பட்ட ஆடைகளை விற்பனை செய்து கல்லாக் கட்டினார்கள்.

கார்பா நடனம்....
தசரா ஸ்பெஷல் தாண்டியா, கார்பா டான்ஸில் கூட மோடியின் பாடல் பாடப் பட்டது குறிப்பிடத்தக்கது.

மோடி மேனியா...
இந்நிலையில், தீபாவளிக்கென மோடி பெயர் மற்றும் போட்டோ போட்ட பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளதாம்.

மோடி பிராண்ட்...
மோடி பிராண்ட் என்ற பெயரில் விற்கப் படும் இந்த பட்டாசுகள் பெரும்பாலும் சீனாவிலும், சிவகாசியிலும் தயாரிக்கப் பட்டவையாம்.

சினிமா பட்டாசு...
மோடி பட்டாசுப் போலவே நடிகர், நடிகைகள் படம் போட்ட பட்டாசுகளையும் பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கிறார்களாம்.

காஸ்ட்லி பட்டாசு....
குறிப்பாக ராஜ்காட்டில் அதிக விற்பனையாகும் இந்தப் பட்டாசுக்களின் விலை சுமார் ஆயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறதாம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications