ஜெ. பதவியேற்பு: டுவிட்டரில் வாழ்த்திய மோடி
டெல்லி: தமிழக முதல்வராக ஆறாவது முறையாக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
'Congratulations to Jayalalithaa ji & her team on taking oath. Centre will work closely with new Govt. for progress of TN. @AIADMKOfficial
— Narendra Modi (@narendramodi) May 23, 2016
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக 134 தொகுதிகளில் வென்று சாதனை படைத்துள்ளது. தமிழக முதல்வராக ஆறாவது முறையாக ஜெயலலிதா பதவியேற்றார். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ரோசையா ஜெயலலிதாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அரசு முறைப் பயனாமாக ஈரான் நாட்டுக்கு பிரதமர் சென்றுள்ளதால், அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர்கள் வெங்கையா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்.
ஆறாவது முறையாக இன்று பதவி ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலிதா, தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலகமான புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்று ஐந்து முக்கிய உத்தரவுகளில் கையொப்பமிட்டார்.
பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் மத்திய அரசின் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர். இந்நிலையில், ஈரான் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
‘தமிழக அரசின் வளர்ச்சிக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications