ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பேச வேண்டாம் : மோடி அட்வைஸ்
டெல்லி: ஆட்சிக்கும், கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என கட்சியினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, 'இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர் உள்பட அனைவரும் ராமரின் பிள்ளைகள். இந்த சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை' எனப் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சாத்வி நிரஞ்சன் மன்னிப்பு கேட்டபோதும், எதிர்க்கட்சிகள் சமாதானம் ஆகவில்லை. சாத்வி நிரஞ்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இந்நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பிக்களிடையே பிரதமர் மோடி பேசினார். அப்போது, ‘சாத்வி நிரஞ்சன் ஜோதியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் ஏற்புடையதல்ல' என்றார்.
மேலும், ‘பெரும் பதவிகளை வகிப்பவர்கள் எதிர்காலத்தில் இது போன்ற சர்ச்சைகள் எழாத வகையில் நடந்து கொள்ள வேண்டும்' என வலியுறுத்திய மோடி, ‘இது போன்ற பொதுக் கருத்துகளை தெரிவிக்கும் போது நீங்கள் (எம்.பி.க்கள்) எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆட்சிக்கும் கட்சிக்கும் அவப்பெயர் உண்டாக்கும் வகையில் பேசுவதை நீங்கள் தவிர்க்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications