மாயம் நிகழ்த்திய டிஜிட்டல் இந்தியா திட்டம்.. என்னென்ன வசதிகள் பாருங்கள்!
மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி இருக்கிறது.
டெல்லி: மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் பண பரிவர்த்தனை டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. நேரடியாக பணம் கொடுப்பது குறைந்து டிஜிட்டல் வர்த்தகம் அதிகம் ஆகி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டமும், ஸ்டார்அப் இந்தியா திட்டமும், பணமதிப்பிழப்பு நீக்கமும் இந்தியாவில் டிஜிட்டல் வர்த்தகத்தை அதிகமாக்கிவிட்டது. முக்கியமாக கேஷ்லெஸ் வர்த்தகமானது, இதன் மூலம் எளிதாக சாத்தியமாகி உள்ளது.

இணையம் வழியாக பணம் பரிமாறப்படுவது பண பரிமாற்றத்தை மட்டும் எளிதாக்கவில்லை, அரசால் பணம் எங்கே செல்கிறது என்பதையும் எளிதாக கண்காணிக்க முடிகிறது. இதன் மூலம் வரி ஏய்ப்பு பெரிய அளவில் தடுக்கபடுகிறது. இந்த டிஜிட்டல் வர்த்தகம் காரணமாக நிறைய புதிய மக்கள் வருமான வரி கட்ட தொடங்கி இருக்கிறார்கள். இதனால் அரசின் வரி வருவாய் அதிகம் ஆகியுள்ளது.
அதேபோல் இதனால் மக்கள் கட்டுக்கட்டாக பணத்தை சுமந்து செல்லும் நிலையும் இப்போது இல்லை. அதேபோல் ஏடிஎம்களில் வரிசையில் நிற்கவேண்டிய நிலையும் மாறிவிட்டது. இதன் மூலம் பண பரிவர்த்தனை மிகவும் எளிதாகி இருக்கிறது.

2011ல் டிஜிட்டல் வர்த்தகத்தில் உலகளவில் இந்தியா 36வது இடத்தில் இருந்தது. 2018ல் இது 28வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இது ஒரு அசாதாரண வளர்ச்சி ஆகும். மக்களுக்கும் மக்களுக்கும், அரசுக்கும் மக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் இடையிலான பண பரிவர்த்தனை இணையம் வழியே மிக அதிகம் ஆகியுள்ளது.
இதன் மூலம் மொபைலில் பண பரிமாற்றம் செய்ய வசூலிக்கப்படும் கட்டணம் மொத்தமாக குறைந்து இருக்கிறது. இதனால் மக்கள் பெரிய அளவில் பலன் அடைந்து இருக்கிறார்கள். எளிதாக இவர்கள் மொபைல் மூலமே பணம் அனுப்ப முடிகிறது.
இதன் காரணமாக இந்தியாவில் இணையம் பயன்பாடு ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் ஜிபியாக உயர்ந்து இருப்பதாக நிதி ஆயோக் அறிக்கை அளித்துள்ளது. இந்த டிஜிட்டல் இந்தியா திட்டத்தை இந்தியாவிலோ பிரபலப்படுத்த அரசு பெரிய அளவில் முயற்சி செய்தது. அதில் தற்போது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கரப்பான் பூச்சிகளின் போராட்டத்தில் இணைந்த AISA, SFI மாணவ இயக்கங்கள்.. மத்திய அரசுக்கு நெருக்கடி!! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications