சமூக வலைதளங்களை மோடி சர்க்கார் பயன்படுத்துவது சட்டவிரோதம்: கோவிந்தாச்சார்யா அதிரடி!

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோவிந்தாச்சார்யா ஒரு பொதுநலன் வழக்கை தொடர்ந்துள்ளார். வெளிநாட்டு சர்வர்களில் இயங்கக் கூடிய சமூக வலைதளங்களை மோடி அரசு பயன்படுத்துவது என்பது நாட்டின் பொது ஆவணங்கள் சட்டத்தை மீறிய செயல் என்று அதில் கோவிந்தாச்சார்யா கூறியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதிகள் பிடி அகமது மற்றும் சித்தார் மிரிதுள் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச் கடந்த வாரம் விசாரித்து கோவிந்தாச்சார்யாவை பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து கோவிந்தாச்சார்யாவின் வழக்கறிஞர் விராக் குப்தா இன்று நீதிமன்றத்தில் அந்த பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
அதில், மத்திய அரசின் முறையான அனுமதி இல்லாமல் எந்த ஒரு ஆவணத்தையும் இந்தியாவை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாது என்கிறது பொது ஆவண சட்டம். இதனால் அரசாங்கம் இ மெயில்களைப் பயன்படுத்துவது கூட சட்டப்படி தவறுதான் என்று வாதிட்டார்.
மேலும் இந்த சமூக வலைதளங்கள், இ மெயில்களின் சர்வர்கள் அனைத்தும் வெளிநாட்டில்தான் இருக்கின்றன. அப்படியான நிலையில் நாட்டின் அதிகாரப்பூர்வ ஆவணத்தை எப்படி மற்ற நாடுகளுக்கு பரிமாறிக் கொள்ள முடியும்? மோடி அரசில் 19 அமைச்சகனங்கள் ட்விட்டரில் கணக்கு வைத்துள்ளன.
5 அமைச்சகங்கள் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது. பிரதமர் அலுவலகமும் டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின் வாதிடுகையில், தேசிய இ மெயில் கொள்கை ஒன்றை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 15-ந் தேதி அனைத்து துறை செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இது தற்போது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக தயார் நிலையில் உள்ளது என்றார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications