நம்பிக்கை இல்லா தீர்மானம்.. நாடாளுமன்றத்தில் பாஜகவின் பலம் என்ன?
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது.
டெல்லி: தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் பாஜக தோற்கடிக்குமா? என்கிற விவாதம் அனல் பறக்கிறது.
2014 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து 282 இடங்களைக் கைப்பற்றியது. அடுத்தடுத்த லோக்சபா இடைத் தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய நிலையில் பாஜகவின் பலம் இப்போது 274. இதில் சத்ருஹன் சின்ஹா உள்ளிட்ட ஒன்றிரண்டு எம்பிக்கள் பாஜக மீது அதிருப்தியில் உள்ளனர்.

ஒட்டுமொத்தமாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு லோக்சபாவில் 331, ராஜ்யசபாவில் 79 எம்.பிக்கள் இருந்தனர். தற்போது பாஜகவுடனான கூட்டணியை தெலுங்குதேசம் முறித்துவிட்டது.
லோக்சபாவில் தெலுங்குதேசம் கட்சிக்கு 16; ராஜ்யசபாவில் 6 எம்.பிக்கள் உள்ளனர். இதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தற்போதைய பலம் லோக்சபாவில் 315; ராஜ்யசபாவில் 73.
ஏற்கனவே பாஜகவுடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டாலும் மத்திய அரசில் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. ஆகையால் தற்போதும் பாஜக கூட்டணியில் சிவசேனா இருப்பதாகவே கருதப்படுகிறது.
லோக்சபாவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் விவரம்:
பாஜக - 274
சிவசேனா- 18
லோக் ஜனசக்தி- 6
அகாலி தளம்- 4
லோக் சமதா- 3
ஐக்கிய ஜனதா தளம்- 2
இந்திய தேசிய லோக் தளம்-2
அப்னா தள்- 2
ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி- 1
சிக்கிம் ஜனநாயக முன்னணி- 1
பாட்டாளி மக்கள் கட்சி- 1
அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ்- 1
தேசியவாத மக்கள் கட்சி- 1
ராஜ்யசபாவில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம்:
பாஜக - 54
ஐக்கிய ஜனதா தளம்- 7
சிவசேனா- 3
அகாலி தளம்- 3
பிடிபி- 2
இந்திய தேசிய லோக் தள்- 1
சிக்கிம் ஜனநாயக முன்னணி- 1
குடியரசு அக்ட்சி அத்வாலே- 1
நாகா மக்கள் முன்னணி-1
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications