மோடியின் 'வெளியுறவு' ஆலோசகராக. "அமைதிப்படை அதிகாரி" சுப்பிரமணியம் ஜெய்சங்கர்?
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகராக அமெரிக்காவுக்கான இந்திய தூதரான சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இவர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதியின் கீழ் பணிபுரிந்தவர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் இலங்கை விவகாரங்களுக்கு என்று தனியே பாரத்தசாரதி என்ற அதிகாரி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். அதைப் போல பிரதமர் நரேந்திர மோடியும் தமது சிறப்பு பிரதிநிதி ஒருவரை இலங்கை விவகாரங்களுக்கு என நியமிக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஒட்டுமொத்த வெளியுறவு விவகாரங்களுக்கு என தனியே ஒரு ஆலோசகரை நியமிக்க பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருக்கும் சுப்பிரமணியம் ஜெய்சங்கரை மோடி தமது ஆலோசகராக நியமிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஓரிரு நாட்களில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.
சுப்பிரமணியன் ஜெய்சங்கர்
டெல்லியில் பிறந்த ஜெய்சங்கரின் தந்தை மத்திய அரசு ஊழியரும் அரசியல் விமர்சகருமான கே.சுப்பிரமணியத்தின் மகன். அவரது சகோதரர் சஞ்சய் சுப்பிரமணியன் வரலாற்று ஆய்வாளர்.
1977ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறையில் இணைந்தார் ஜெய்சங்கர் சுப்பிரமணியம்.. 1979 ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை சோவியன் யூனியனுக்கான இந்திய தூதரகத்தில் அதிகாரியாக பணியாற்றினார்.
பின்னர் இந்திரா காலத்தில் இலங்கைக்கான சிறப்பு பிரதிநிதியாக இருந்த ஜி. பார்த்தசாரதிக்கு சிறப்பு உதவியாளராக இருந்தார். அதைத் தொடர்ந்து 1989- 90ஆம் ஆண்டு இலங்கையில் நிலை கொண்ட இந்திய அமைதிப்படயின் அரசியல் ஆலோசகராக இருந்தார். அதன் பின்னர் ஜப்பான், சீனா நாடுகளுக்கான தூதராக இருந்த சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தற்போது அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications