அது ஏன் நிதிஷ்ஜிக்கு கரெக்டா '3 இடியட்ஸ்' நினைவுக்கு வந்தது?: மோடி கிண்டல்
பாட்னா: காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம், ஐக்கிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் கூட்டணியை 3 இடியட்ஸுடன் ஒப்பிட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இது குறித்து மோடி கூறுகையில்,

லாலுஜி பொழுதுபோக்காக பேசி வருவதை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து பீகார் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை பாதுகாப்பது, உண்மையை மறைப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் லாலுஜி மற்றும் நிதிஷ்ஜிக்கு இடையே பிரச்சனை உள்ளது.
நிதிஷ்ஜி நேற்று கவிதை வாசித்தார். கவிதை வாசித்து லாலுவை தோற்கடிக்கலாம் என்று அவர் நினைக்கிறார். காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாளம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளன.
நிதிஷ் தனது கவிதைக்கு எதற்காக 3 இடியட்ஸ் படத்தில் வரும் பாடலை தேர்வு செய்தார் என தெரியவில்லை. அவருக்கு ஏன் 3 இடியட்ஸ் நினைப்பு வந்தது. என்ன ஒரு பொழுதுபோக்கு நிதிஷ் பாபு. உங்களுக்கு இன்னும் ஒரு வாரம் அவகாசம் உள்ளது. அந்த ஒரு வாரமும் இதையே செய்யுங்கள். உங்களின் ஆட்களை அழைத்து கவியரங்கம் நடத்துங்கள்.
நன்றாக பயிற்சி எடுங்கள் நவம்பர் 8ம் தேதிக்கு(வாக்கு எண்ணிக்கை) பிறகு உங்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். அப்போது நீங்கள் ஏன் சிலரை விட்டு விலகி சிலருடன் சேர்ந்தீர்கள் என உங்கள் சோகத்தை, கண்ணீர் கதையை நிதானமாக பாட்டு பாடுங்கள்.
இது குறித்து கவிதை எழுதிக் கொண்டே இருங்கள், கண்ணீர் விட்டுக் கொண்டே இருங்கள் என்றார்.
நிதிஷ் குமார் மோடி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை கிண்டல் செய்து 3 இடியட்ஸ் படத்தில் வரும் பாடல் வரிகளை மாற்றி பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications