மறைந்த என் தந்தையை மோடி அவமதித்துவிட்டார்: பிரியங்கா குற்றச்சாட்டு
டெல்லி: பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி கொல்லப்பட்ட தனது தந்தை ராஜீவ் காந்தியை அவமதித்துவிட்டதாக பிரியங்கா காந்தி வாத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி தீவிரப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடைசி நேரத்தில் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ரா பிரச்சாரம் செய்ய வந்துள்ளார்.
அவரது நறுக், சுறுக் பிரச்சாரம் மீடியா மற்றும் மக்களை கவர்ந்துள்ளது.

பிரியங்கா
மோடி கொல்லப்பட்ட எனது தந்தையை அமேதி மண்ணில் அவமதித்துவிட்டார். அவரின் இந்த செயலை அமேதி மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரியங்கா தெரிவித்துள்ளார்.

அரசியல்
பாஜக பிரதமர் வேட்பாளரான மோடி கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுகிறார். அவருக்கு அனைத்து வாக்குச்சாவடிகளில் இருந்தும் பதில் கிடைக்கும் என்று பிரியங்கா கூறினார்.

பதிலடி
மோடி ஏதாவது பேசுவதும் அதற்கு பிரியங்கா காந்தி நச்சென்று பதிலடி கொடுப்பதும் இது ஒன்றும் முதல் முறை அன்று.

ராஜீவ் மகள்
மோடி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளிக்கையில் பிரியங்கா தனது மகள் போன்று என்று தெரிவித்தார் என செய்திகள் வெளியாகின. இதை கேட்ட பிரியங்கா, நான் ராஜீவ் காந்தியின் மகள் என்று மோடிக்கு பதில் அளித்தார்.

அகந்தை
அமேதியில் பேசிய மோடி, அந்த தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான நடிகை ஸ்மிருதி இரானியை யார் என்று கேட்ட பிரியங்கா அகந்தை பிடித்தவர் என்று தெரிவித்தார்.
-
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications