ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமதித்த மத்திய அரசு! டெல்லியில் நடுத்தெருவில் அதிமுக எம்பிக்கள்!!
டெல்லி: காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுக்க அனைத்து அதிமுக எம்.பிக்களும் அனுமதி மறுத்து ஒட்டுமொத்த தமிழகத்தையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அவமதித்துள்ளது. தமிழக மக்களின் பிரதிநிதிகளாகிய தங்களை நடுத்தெருவில் மத்திய அரசு நிற்க வைத்தததால் அதிமுக எம்பிக்கள் கொந்தளித்து போயினர்.
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்ற உத்தரவு. இந்த உத்தரவை ஏற்பதாக முதலில் மத்திய அரசு தெரிவித்தது.
பின்னர் திடீரென மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இது தமிழகத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திடீர் பேரணி
இந்த நிலையில் டெல்லியில் அதிமுகவின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள் அனைவரும் ஒன்று திரண்டனர். நாடாளுமன்ற அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவிட்டு பின்னர் பேரணியாக பிரதமர் அலுவலகம் நோக்கி அனைத்து அதிமுக எம்.பிக்களும் புறப்பட்டுச் சென்றனர்.

தடுத்து நிறுத்தம்
பிரதமர் அலுவலகம் அருகே அனைத்து அதிமுக எம்.பிக்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். தம்பித்துரை உள்ளிட்ட சில எம்.பிக்களுக்கு மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

மல்லுக்கட்டிய எம்பிக்கள்
ஆனால் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்கள் அனைவரையும் பிரதமர் அலுவலகத்துக்குள் அனுமதிக்க வேண்டும் என்று நடுத்தெருவில் நின்றபடி அதிமுக எம்பிக்கள், பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் மல்லுக்கட்டினர்.

ஒட்டுமொத்தமாக அவமதிப்பு
பிரதமர் அலுவலக அதிகாரிகளோ, அதிமுக எம்பிக்களை மதிக்காமல் தொடர்ந்தும் நடுத்தெருவிலேயே நிற்க வைத்தனர். ஒட்டுமொத்த தமிழகத்தையே அவமதிக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு நடந்து கொண்டது அதிமுக எம்பிக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications