கடவுள் நமக்குக் கொடுத்து "கிப்ட்" எது தெரியுமா?- வெங்கய்யா சொல்வதை கேளுங்க மக்களே!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, நமக்குக் கடவுள் கொடுத்த பரிசு என்று கூறி பாஜகவினரையே அசரடித்து விட்டார் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு.
டெல்லியில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு. நேற்று அவர் அக்கூட்டத்தில் அரசியல் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து பேசுகையில்தான் இப்படி மோடியை கடவுளின் பரிசு என்று கூறி அசத்தினார் வெங்கையா நாயுடு. இந்திய மக்களின் மனம் கவர்ந்த தலைவர் மோடிதான் என்றும், ஏழைகளை ரட்சிக்க வந்தவர் என்றும் வெங்கையா நாயுடு மோடியைப் புகழ்ந்தார்.
மேலும், இது குறித்து அவர் பேசியதாவது:-

கடவுளின் பரிசு...
மோடி கடவுள் இந்தியாவுக்குக் கொடுத்த பரிசு. ஏழைகளின் காப்பாளர் அவர். ஏழைகளை ரட்சிக்க வந்தவர். சவால்களை எளிதாக எதிர்கொண்டு சந்திப்பவர் மோடி.

திறமையானவர்...
சவால்களை சந்திக்கப் பயப்படாதவர் அவர். அவற்றை எளிதாக முறியடிகக் கூடிய திறமை படைத்தவர். ஒவ்வொரு துறையிலும் உள்ள சவால்களை, பிரச்சினைகளை அடையாளம் கண்டு சரி செய்பவர் மோடி.

டைம் பட்டியல்...
டைம் இதழ் 2015ம் ஆண்டு அவரை 100 மிகப் பெரிய மனிதர்களின் வரிசையில் இடம் பெற வைத்தது. இந்த ஆண்டு அவர் 30வது இடத்தில் இருக்கிறார்.

சமூகவலைதளங்களில்...
சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமாக உள்ள தலைவர் மோடி மட்டுமே. அவருக்கு டிவிட்டரில் 18 மில்லியன் பாலோயர்கள் உள்ளனர். பேஸ்புக்கில் 32 மில்லின் பாலோயர்கள் உள்ளனர்.

மெழுகுச்சிலை...
மேடம் துஸ்ஸாட்ஸ் மியூசியமே மோடியின் மெழுகுச் சிலையை நிறுவவுள்ளது. இதிலிருந்தே அவரது பிரபலத்தை புரிந்து கொள்ளலாம். வளரும் இந்தியாவை மாற்றியமைத்த பெருமை மோடிக்கு மட்டுமே உண்டு.

மனம் கவர்ந்த ஒரே தலைவர்...
புதிய உயரங்களைத் தொட்டவர் மோடி. இந்திய மக்களின் மனம் கவர்ந்த ஒரே தலைவர் மோடி மட்டுமே' என இவ்வாறு வெங்கையா மோடி தனது உரையில் மோடியைப் பாராட்டினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே!












Click it and Unblock the Notifications