பிரதமர் ரேஸில் யாருக்கு முன்னிலை.. மோடியா? ராகுலா?.. இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் சர்வே
பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மோடிக்குத்தான் மக்கள் அதிக ஆதரவு அளிப்பார்கள் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் மோடிக்குத்தான் மக்கள் அதிக ஆதரவு அளிப்பார்கள் என்று இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் நடத்திய சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. சமயத்தில் இந்த வருடம் இறுதியில் கூட தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்தியா டுடே - கார்வி இன்சைட்ஸ் அமைப்பு இணைந்து இந்தியா முழுக்க சர்வே நடத்தியது.
அடுத்த தேர்தல், கடந்த 4 ஆண்டு பாஜக ஆட்சி, பிரதமர் வேட்பாளர் ஆகிய பல விஷயங்கள் குறித்து இதில் கேள்வி கேட்கப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.

மோடிக்கு ஆதரவு
அதன்படி பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடி அறிவிக்கப்பட்டால், மோடிக்கே மக்கள் அதிக ஆதரவு அளிப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மொத்தமாக மோடிக்கு 49 சதவிகித மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். மீண்டும் அவர் பாஜக சார்பாக நிறுத்தப்பட்டால் பிரதமராக வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

ராகுல்
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ராகுல் காந்திக்கு 27 சதவிகித மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். அதாவது முன்பை விட ராகுல் காந்திக்கு மக்கள் ஆதரவு அதிகம் ஆகியுள்ளதாக இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

மாற்று யார்
அதேபோல் இதில் பிரதமர் மோடிக்கு சிறந்த மாற்று யார் என்றும் கேள்வி கேட்கப்பட்டது. இதில் மோடிக்கு மாற்று ராகுல்தான் என்று 46% மக்கள் தெரிவித்துள்ளனர். மமதா பானர்ஜிதான் மாற்று என்று 8% மக்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனால் ராகுல் ரேஸில் முன்னிலையில் உள்ளார்.

வேறு யார் மாற்று
மோடிக்கு மாற்று என்று இன்னும் சில முக்கியமான தலைவர்களின் பெயரும் கூறப்பட்டுள்ளது. ப. சிதம்பரம்தான் மோடிக்கு மாற்று என்று 6% மக்கள் தெரிவித்துள்ளனர். பிரியங்கா காந்தி என்று 6% மக்கள் தெரிவிக்கிறார்கள். அகிலேஷ் யாதவ் என்று 4% மக்கள் தெரிவிக்கிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் என்று 4% மக்கள் தெரிவிக்கிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications