நேரு நினைவு அறக்கட்டளை பொறுப்பிலிருந்து சோனியா விலகல்... புதிய தலைவராகிறார் மோடி
டெல்லி: நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து நேற்று பதவி விலகினார் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி.
நேரு-காந்தி குடும்பத்தின் பாரம்பரிய சின்னமாக கருதப்படுகிறது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம். இது பிரதமர் தலைமையிலான மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் ஓர் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த அறக்கட்டளையில் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒரு அறங்காவலராக உள்ளார். காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்பட 17 பேரை உறுப்பினர்களாக கொண்ட இந்த அருங்காட்சியகத்தின் தலைவராக பிரதமர் மன்மோகன் சிங், நிர்வாகக் கவுன்சில் தலைவராக டாக்டர் கரண் சிங் ஆகியோர் உள்ளனர். வரலாற்று அறிஞர் பேராசிரியர் மகேஷ் ரங்கராஜன், டாக்டர் என். பாலகிருஷ்ணன் ஆகியோரும் அருங்காட்சியக குழுவில் உள்ளனர்.
ஏற்கனவே, பண்டித ஜவஹர்லால் நேருவின் 125வது பிறந்த நாள் நினைவுக்கான தேசிய கமிட்டியிலிலிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியா விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று தனது நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நுலகம் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்தும் சோனியா காந்தி விலகியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு சாதகமாக அமையாத நிலையில் சோனியாவின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே வரும் திங்கட்கிழமை நரேந்திர மோடி புதிய பிரதமராக பதவியேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து நேரு நினைவு சமூகத்தின் அடுத்த தலைவராகிறார் மோடி.
சோனியா காந்தி தலைவர் பொறுப்பிலிருந்து விலகியது பற்றி கருத்துக் கூற அதன் இயக்குநர் மகேஷ் ரங்கராஜன் மறுத்துவிட்டார்.
-
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications