கூட்டணிக் கொசுக்கடி தாங்க முடியலை... பட்ஜெட்டுக்கு முன்பாகவே மோடி அமைச்சரவை விரிவாக்கம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாகே தனது அமைச்சரவை விரிவாக்கத்தை பிரதமர் மோடி மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது.
என்னதான் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்து விட்டாலும் கூட்டணிக் கொசு கடிக்காமல் விடாது கதையாக கூட்டணிக் கட்சிகள், பாஜகவை ஆளாளுக்கு அமைச்சர் பதவி கேட்டு நெருக்கி வருகின்றன.
என்னதான் மோடி கெடுபிடியானவராக இருந்தாலும் கூட்டணிக் கட்சிகளை ஒரேயடியாக பகைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார். காரணம் பல மாநிலங்களில் வரப் போகும் சட்டசபைத் தேர்தல்கள்.

முதல் விரிவாக்கம்.. ஒரு மாதத்தில்
இதனால் இன்னும் ஒரு மாதத்தில், அதாவது பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பாகவே தனது முதல் அமைச்சரை விரிவாகத்தை அவர் மேற்கொள்வார் என்று தெரிகிறது.

பாஜகவுக்கே நிறைய டிமாண்ட்
கூட்டணிக் கட்சிகளுக்காக என்பதை விட பாதுகாப்பு, சட்டம் சமூக நீதி, சுற்றுச்சூழல் மற்றும் வனம் உள்ளிட்ட துறைகளை வேறு சிலருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. இவையெல்லாம் பாஜகவுக்கே போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் சுமையுடன் ஜேட்லி -பிரசாத்- ஜவடேகர்
தற்போது இந்தத் துறைகளை கூடுதலாக அருண் ஜேட்லி, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகரிடம் கொடுத்து வைத்துள்ளார் மோடி.

ஜூலை முதல் வாரத்தில்
அனேகமாக ஜூலை முதல் வாரத்திற்குள்ளாக முதல் அமைச்சரவை விரிவாக்கம் இருக்கலாம் என்கிறார்கள். அப்போதுதான் நாடாளுமன்றம் பட்ஜெட்டுக்காக கூடவுள்ளது.

மகன் அன்புமணி.. மச்சான் சுதீஷ்
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின்போது டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி, விஜயகாந்த்தின் மச்சான் சுதீஷ் ஆகியோருக்கும் ஏதாவது கிடைக்கலாம் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications