எளிமையான முதல்வர்களில் நீங்களும் ஒருவர்... புதுவை ரங்கசாமியை பாராட்டிய மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எளிமையான முதல்வர்களில் ரங்கசாமியும் ஒருவர் என மோடி பாராட்டியுள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தல்களில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. அக்கூட்டத்தில் நரேந்திரமோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

Modi praises Rangasamy

அதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. அதில், புதுவையில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முதல்வருமான ரங்கசாமி கலந்து கொண்டார். இதேபோல தமிழ்நாட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர்.

பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள மோடிக்கு, அவர்கள் அனைவரும் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, கூட்டணித் தலைவர்களின் தேர்தல் பிரச்சார செயல்பாடு குறித்து பாராட்டிப் பேசினார் மோடி. அதில் குறுப்பாக புதுவை முதல்வர் ரங்கசாமியை ‘நாட்டிலேயே மிகவும் எளிமையான முதல்வர்களில் ஒருவர் என மோடி பாராட்டினார். மேலும் ரங்கசாமியின் எளிமையும், அவருடைய திறமையும் அவரை சிறந்த தலைவராக உருவாக்கி இருக்கிறது என்றும் மோடி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+