டெல்லியில் மோடி அரவணைப்பில் "தடுமாறி விழப்போன விஜயகாந்த்"- வீடியோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த போது அவரது அரவணைப்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் "தடுமாறி" விழப்போயிருக்கிறார்.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நேற்று பாரதிய ஜனதா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக குழு மற்றும் தேசிய ஜனநாயகக் குழுவின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அப்போது நரேந்திர மோடிக்கு பலரும் வரிசையில் நின்று வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்படி விஜயகாந்த்தும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார் மோடி. பின்னர் அவரை தமது அருகே வரவழைத்தார்.

Modi praises Vijayakanth's poll efforts in TN

விஜயகாந்தை மோடி அரவணைத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார். அப்படி மோடி அரவணைத்தபோது விஜயகாந்த் தடுமாறி அப்படியே மோடி மீது சாய்ந்து கீழே விழப்போக பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் பதறிப்போனார்.. அங்கிருந்த பாதுகாவலர்களும் விஜயகாந்தை தாங்கிப் பிடிக்க முனைந்தனர். அதற்குள் மோடியும் சுதீஷும் அவரை தாங்கிக் கொண்டனர்.

அப்போது தம் கண்களைக் காட்டி விஜயகாந்த் ஏதோ சொல்ல மோடியும் அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மோடிக்கு பொன்னாடை அணிவித்த விஜயகாந்தை கன்னத்தில் தட்டிக் கொடுத்து நெகிழ வைத்தார்.

பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பேசிய மோடி விஜயகாந்தின் தேர்தல் பிரசாரத்தைப் பாராட்டினார். அதேபோல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவின் தேர்தல் பிரசாரத்தையும் நரேந்திர மோடி பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் "தடுமாறி விழப்போன" வீடியோ இணைப்பு:

<iframe width="640" height="417" src="//www.youtube.com/embed/vAmjBLoAGiY" frameborder="0" allowfullscreen></iframe>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+