பாட்னாவில் சூ, சூவென விற்றுத் தீரும் மோடி ராக்கிகள்: குஷியில் வியாபாரிகள்
பாட்னா: சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகாரில் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி பிரதமர் மோடியின் உருவம்பதித்த ராக்கிகளுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது.
ரக்ஷாபந்தன் பண்டிகை இந்த வார இறுதியில் கொண்டாடப்படுகின்றது. பண்டிகை தினத்தன்று பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக நினைக்கும் ஆண்களின் கையில் ராக்கியை கட்டுவார்கள். பதிலுக்கு சகோதரர்கள் அவர்களுக்கு அன்பளிப்பு அளிப்பார்கள்.

ரக்ஷாபந்தன் பண்டிகையையொட்டி ராக்கி விற்பனை சூடுபிடித்துள்ளது. சட்டசபை தேர்தல் நடக்க உள்ள பீகார் தலைநகர் பாட்னாவில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவம் பதித்த ராக்கிகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். அந்த ராக்கிக்கு மோடி ராக்கி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மோடி ராக்கி கடைக்கு வந்த வேகத்தில் விற்றுவிடுகிறது. கிராக்கி அதிகம் இருப்பதால் பிற வகை ராக்கிகளை விட மோடி ராக்கி அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து ராக்கியை மொத்த விற்பனை செய்யும் பிரமோத் குமார் கூறுகையில்,
பெரியவர்களை மோடி ராக்கி கவர்ந்துள்ளது. குழந்தைகளுக்கு சோட்டா பீம், ஆங்ரி பேர்ட்ஸ் உள்ளிட்ட ராக்கிகள் பிடித்துள்ளது. பாட்னா மார்க்கெட்டில் முதல்முறையாக மோடி ராக்கிகள் விற்பனைக்கு வந்துள்ளன. மோடி ராக்கிகள் கொல்கத்தாவில் இருந்து வருகிறது. வந்த வேகத்தில் விற்றுவிடுகிறது என்றார்.
மோடி ராக்கிகள் கடைக்கு வந்த வேகத்தில் விற்றுத்தீர்கிறது. குறைந்த நேரத்தில் இவ்வளவு ராக்கிகளை விற்பேன் என்று நான் நினைக்கவே இல்லை என்று வியாபாரி கோல்டி குமார் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications