அமீரக சுற்றுப்பயணம் வெற்றி: மோடி ஹேப்பி அண்ணாச்சி
டெல்லி: ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றார். அபுதாபியை அடைந்த அவருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் அபுதாபியில் பட்டத்து இளவரசர், அரசு அதிகாரிகள், தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களை இந்தியாவில் அதிக அளவில் முதலீடு செய்யுமாறு வலியுறுத்தினார். இந்தியாவில் ரூ.. 5 லட்சம் கோடி முதலீடு செய்ய அமீரகம் முடிவு செய்துள்ளது.

அபுாதபியில் உள்ள பிரபல ஷேக் ஜயீத் மசூதிக்கு மோடி சென்றார். அதன் பிறகு துபாய் சென்ற மோடி அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் 50 ஆயிரம் இந்தியர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். மோடிக்கு இந்தியர்கள் உற்தாக வரவேற்பு அளித்து அசத்தினார்கள்.
கடந்த 34 ஆண்டுகளில் அமீரகம் சென்றுள்ள முதல் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது. தனது பயணத்தை முடித்துக் கொண்டு மோடி நேற்று இரவு துபாயில் இருந்து கிளம்பினார். இன்று அதிகாலை அவர் டெல்லியை அடைந்தார்.
மோடியின் அமீரக பயணம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications