பிரதமர் ஆக ஆசைப்படும் மோடி இப்படி சின்னப்புள்ளத்தனமாக இருக்கலாமா?: பிரியங்கா 'பொளேர்'
அமேதி: பிரதமர் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் பாஜக தலைவர் மோடியின் செயல் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் துணை தலைவரும், தனது சகோதரருமான ராகுல் காந்திக்காக உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் பிரியங்கா காந்தி பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில் கூறியதாவது,

ராஜீவ்
என் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி நாட்டில் கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியபோது பாஜக அவரை கிண்டல் செய்தது. தற்போது என் சகோதரரை கிண்டலடிக்கிறது.

ராகுல்
பாஜக ராகுலை மாதிரி வடிவும் என்று அழைக்கிறது. அவரை நகைச்சுவை நடிகரோடு ஒப்பிடுகிறார்கள். சில சமயம் இளவரசர் என்று அழைக்கிறார்கள்.

மோடி
நீங்கள்(மோடி) பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் ஏன் சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்கிறீர்கள். கண்ணியத்துடன் அல்லவா அவர்(மோடி) நடந்து கொள்ள வேண்டும்.

ஸ்மிருதி
பாஜக வேட்பாளரான ஸ்மிருதி இரானி அமேதி தொகுதியில் மின்சாரம் மற்றும் முன்னேற்றம் இல்லாததை தெரிவிக்க இருட்டு அறைகளில் கூட்டங்களை நடத்துகிறார்.

பாஜக
மாநிலங்களிலும், மத்தியிலும் வெவ்வேறு அரசுகள் உள்ளன. மின்சாரம் வழங்குவது மாநில அரசின் கடமை. உத்தர பிரதேச அரசு மின்சாரம் வழங்கவில்லை என்று பாஜக தலைவர்கள் லக்னோவில் போராட்டம் நடத்தினார்கள். தற்போது அந்த கட்சி வேட்பாளர் நாடகம் ஆடுகிறார் என்றார் பிரியங்கா.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications