காந்திநகரில் மோடியின் தாயார் ஹீராபென் வாக்களித்தார்!
குஜராத் தேர்தலில் காந்திநகர் வாக்குச்சாவடியில் பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் வாக்களித்தார்.
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்: குஜராத் சட்டசபைக்கான 2-ம் கட்ட தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் இன்று காந்திநகரில் வாக்களித்தார்.
குஜரத்தில் 2-வது கட்டமாக 93 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இன்று பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, பாஜக தலைவர்கள் அத்வானி, அமித்ஷா உள்ளிட்டோரும் வாக்களிக்க உள்ளனர்.

இன்று காலையிலேயே பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் காந்திநகர் வாக்குச் சாவடிக்கு காரில் அழைத்துவரப்பட்டார். பின்னர் வாக்குச் சாவடிக்குள் அவர் கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டா.

அங்கு தமது வாக்கை ஹீராபென் பதிவு செய்தார். இதையொட்டி அந்த வாக்குச் சாவடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

PM Modi's mother Heeraben cast her vote in a polling booth in Gandhinagar #GujaratElection2017 pic.twitter.com/5PJxvGbf91
— ANI (@ANI) December 14, 2017












Click it and Unblock the Notifications