8000 பேர் பங்கேற்ற பதவியேற்பு விழா.. டிவியில் பார்த்து குழந்தையை போல் கைத்தட்டி மகிழ்ந்த ஹீராபென்!
Recommended Video
அகமதாபாத்: மோடியின் பதவியேற்பு விழாவை அவரது தாயார் ஹீராபென் டிவியில் பார்த்து கைத்தட்டி மகிழ்ந்த போட்டோ வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக நேற்று முறைப்படி ஆட்சியமைத்தது. அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
மோடியின் பதவியேற்பு விழாவில் பாகிஸ்தானை தவித்து அண்டை நாடுகளான இலங்கை, ஈரான், கிர்கிஸ்தான், பங்களாதேஷ், தாய்லாந்த், பூடான், மியான்மர், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், தொழில் அதிபர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

8000 பேர் பங்கேற்பு
மொத்தம் 8 ஆயிரம் பேர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். விருந்தினர்களுக்கான சைவ, அசைவ உணவுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள சிறப்பு சமையல்காரர்களால் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டது.

நேரலையில் ஒளிபரப்பு
தடல்புடல் விருந்துடன் வெகுவிமரிசையாக புதிய அரசின் பதவியேற்பு விழா நடைபெற்றது. மோடியின் பதவியேற்பு விழாவை அனைத்து ஊடகங்களும் நேரலையில் ஒளிபரப்பு செய்தன.

2 மணி நேரம் நடைபெற்றது
சரியாக 7 மணிக்கு மோடியின் பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையின் தர்பார் ஹாலில் தொடங்கியது. இந்த பதவியேற்பு விழா சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

கைகளை தட்டி
இந்நிலையில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற விழாவை, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள வீட்டில் இருந்து அவரது தாயார் ஹீரா பென், டி.வி- யில் பார்த்தார். மகன் மோடி பதவியேற்றதை டிவியில் பார்த்து ஹீராபென் கைகளை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
|
வைரலாகும் போட்டோ
மோடியின் தாயார் பதவியேற்பு விழாவை டிவியில் பார்த்து ரசிக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மகன் பதவியேற்பதை ரசித்து குழந்தையை போல கைத்தட்டும் மோடியின் தாயார் ஹீரா பென்னை ‘க்யூட்‘ என பலரும் புகழ்ந்து வருகின்றனர். பிரதமர் மோடி பதவியேற்பு விழாவை ஹீரா பென் டிவியில் பார்த்து ரசிக்கும் போட்டோ பலரின் லைக்குகளை பெற்றுள்ளதோடு பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications