குஜராத்தில் நல்ல பாடம்.. பொருளாதார சீர்திருத்தங்களை கிடப்பில் போடுமா பாஜக?
குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதையே காட்டுவதாக தெரிகிறது.
Recommended Video

டெல்லி: குஜராத் தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையே காட்டுவதாக தெரிகிறது.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி வாகை சூடுகிறது. இதனால் ஆறாவது முறையாக அம்மாநிலத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சியமைக்கிறது.
இதேபோல் ஹிமாச்சலிலும் பாஜக வெற்றி முகத்தில் உள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்குப்பிறகு பாஜக அம்மாநிலத்தில் ஆட்சியமைக்கவுள்ளது.

சீர்திருத்தால் தாக்கம்
பிரதமர் மோடியின் பொருளாதார சீர்திருத்தங்களான பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஒரே நாடு ஒரே வரி என்ற கொள்கையின் ஜிஎஸ்டி ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல் வெளியாயின.

குறைவான தாக்கம்
ஆனால் குஜராத் தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு சீர்திருத்தங்கள் பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மாறாக தேர்தல் முடிவில் மோடியின் சீர்திருத்தங்களில் சிறிய அளவிலா மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறைந்துபோன டார்கெட்
குஜராத்தில் பாஜக 150 இடங்களை டார்கெட்டாக வைத்து வேலை செய்தது. ஆனால் தனது டார்செட்டை பாஜகவால் அடையமுடியவில்லை.

ஜனரஞ்சக நடவடிக்கைகள்
இதனால் மோடி தனது சீர்திருத்த கொள்கைகளை மறு ஆய்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வரும் காலங்களில் தீவிர சீர்திருத்த நடவடிக்கையை கைவிட்டு ஜனரஞ்சகமான நடவடிக்கைகளை பிரதமர் மோடி மேற்கொள்ளவேண்டும்.

பெரும் ஆபத்தாக இருக்கும்
தனது சீர்குலைந்த சீர்திருத்தங்களை தொடர பிரதமர் மோடி விரும்பவில்லை எனத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி கொள்கைள் வரும் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பெரும் ஆபத்தாக இருக்கும் என கூறப்படுகிறது.

வெற்றி வாக்குகளை பெறலாம்
பிரதமர் மோடி சீர்திருத்த நடவடிக்கைகளை தவிர்த்து மக்களுக்கு தேவையான சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரும் தேர்தல்களில் வெற்றி வாக்குகளை பெறல முடியும் என கூறப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications