திரிபுராவில் "மோடி சர்க்கார்".. ஏழை முதல்வர் மாணிக் சர்க்காருக்கு இந்தப் பரிசு நியாயமா மக்களே!
திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
Recommended Video

அகர்தலா: திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
59 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் இடது சாரிகளின் கோட்டையாக இருந்த திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சியே நடைபெற்று வந்தது.

களம் கண்ட காங்கிரஸ்
இந்நிலையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக பாஜக அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. நாட்டின் ஏழை முதல்வர் எளிமையான முதல்வர் என போற்றப்பட்ட மாணிக் சர்க்காரை முன்னிலைப்படுத்தி களம் கண்டது காங்கிரஸ்.

பாஜக 40 இடங்களில் வெற்றி
காலையில் லீடிங்கில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி நேரம் செல்ல செல்ல பெரும் பின்னடைவை சந்தித்தது. பாஜக 40 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

காங்கிரஸ் படுதோல்வி
இதன்மூலம் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. இடதுசாரிகள் வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.

முடிவுக்கு வந்த மாணிக் சர்க்கார்
நாட்டின் ஏழ்மையான முதல்வர் சொந்த வீடு கூட இல்லாத முதல்வர், எளிமையின் மறு உருவம் என்றெல்லாம் போற்றப்பட்ட திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரின் 20 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

தகர்ந்த கோட்டை
மேற்குவங்கத்தை தொடர்ந்து இடது சாரிகளின் இன்னொரு கோட்டையான திரிபுராவும் தகர்ந்துள்ளது. 25 வருடங்களில் இல்லாத தோல்வியை சந்தித்துள்ளதால் மார்க்சிஸ்ட் கட்சி கடும் அதிர்ச்சியடைந்துள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications