ஊழல் குற்றச்சாட்டில் இருந்து அருண் ஜேட்லி விரைவில் மீண்டு வண்ணமயமாக ஜொலிப்பார்... பிரதமர் மோடி
டெல்லி: டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து மீண்டு வந்து அருண் ஜேட்லி விரைவில் வண்ணமயமாக ஜொலிப்பார் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அருண் ஜேட்லி, கடந்த 2013-ம் ஆண்டுவரை, சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக டெல்லி கிரிக்கெட் சங்கத் தலைவராக பதவி வகித்தார். அப்போது, டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தை விரிவாக்கம் செய்வது தொடர்பாக போலியாக பல்வேறு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிதி முறைகேட்டில் அப்போது தலைவர் பதவி வகித்த அருண் ஜேட்லிக்கும் தொடர்பு உள்ளது என்று கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டுக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், நேற்று முன் தினம் பாஜக எம்.பி. கீர்த்தி ஆஸாத் வீடியோ காட்சிகளுடன் சில ஆதாரங்களை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து அருண் ஜேட்லியை பதவியில் இருந்து நீக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஹவாலா மோசடி வழக்கில் இருந்து அத்வானி தன்னை குற்றமற்றவர் என நிரூபித்து மீண்டு வந்ததைப்போல, டெல்லி கிரிக்கெட் சங்க முறைகேடு தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சையிலிருந்து ஜேட்லி விரைவில் மீண்டு வந்து வண்ணமயாக ஜொலிப்பார் என தெரிவித்தார்.
இந்தக் கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
மத்திய அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி எவ்வித ஆதாரமும் இன்றி போலியான, தவறான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். சுஷ்மா சுவராஜ், சிவராஜ் சிங் சவுகான், வசுந்தரா ராஜே ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் இருந்து அவர்கள் மீண்டு வந்ததைப்போல ஜேட்லியும் மீண்டு வருவார் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் என்றார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசை களங்கப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் புதுப்புது பிரச்சனைகளை உருவாக்கி வருவதாகவும் வெங்கைய நாயுடு குற்றம் சாட்டினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications