இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
டெல் அவில்: 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் சென்றடைந்தார். அங்கு மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்கு சென்றுள்ளார். இந்தியாவுக்கும், இஸ்ரேலுக்கும் தூதரக உறவு ஏற்பட்டு 25 ஆண்டுகள் நிறைவையொட்டி அதன் நினைவாக மோடி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடிக்கு தலைநகர் டெல் அவிவில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு மோடியை நேரில் வரவேற்றார். அமெரிக்க அதிபர், போப் ஆண்டவருக்கு பின்னர் பெஞ்சமின் நேதன்யாஹுவால் நேரில் சென்று மோடியை வரவேற்றது கவனிக்கத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பெஞ்சமின் நேதன்யாஹுவுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையே பல முக்கிய உறவுகளை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இஸ்ரேலுடன், விவசாயம் மற்றும் தண்ணீர், கண்டுபிடிப்புகள், வளர்ச்சி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், விண்வெளி ஆகிய துறைகளில் இந்தியா ஒப்பந்தங்கள் செய்துகொள்ளும் என தெரிகிறது. இதுதவிர இரு நாட்டு மக்களிடையே தொடர்புகளை ஏற்படுத்துவது, விமான போக்குவரத்து, முதலீடு ஆகியவைகளை வலுப் படுத்துவதற்கான வழிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தின் போது இஸ்ரேல் அதிபர் ரிவ்லினையும் மோடி சந்தித்து பேசுகிறார். ஹைபாவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மோடி அஞ்சலி செலுத்துகிறார். இந்திய பிரதமர் ஒருவர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் நாட்டுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications