2 ஆண்டுகளில் உடைக்கு மட்டும் ரூ75 கோடி மட்டும் செலவிட்ட மோடி... கேஜ்ரிவால் அதிரடி தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 ஆண்டுகளில் உடைக்கு மட்டும் ரூ75 கோடி செலவிட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்துள்ள பேட்டி:

பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் செலவில் ஒவ்வொரு நிகழ்வுக்கும் உடை வாங்குகிறார். ஒரு முறை அணிந்த உடையைத் திரும்ப அணிவதில்லை.

Modi spent Rs 75 crore on clothes, says Arvind Kejriwal

நான் ஒரு கணக்குச் சொல்கிறேன். மோடியின் ஒரு ஆடையின் செலவு ரூ. 2 லட்சம். ஒரு நாளைக்கு 5 முறை உடைகளை மாற்றுகிறார். அப்படி ஒரு நாளைக்கு 10 லட்ச ரூபாய்க்கு ஆடை அணிகிறார்.

அப்படிப் பார்த்தால் கடந்த 2 ஆண்டுகளில் ரூ. 75 கோடியை அவர் உடைகளுக்காகச் செலவிட்டுள்ளார். என்னிடம் ஒரு மிகப் பெரிய ஆதாரம் உள்ளது.

கூகுள் போய் பாருங்கள். மோடி என்று டைப் செய்து, புகைப்படங்களைச் சோதித்து பார்த்தால், மோடி ஒரு முறை அணிந்த ஆடையை மறுமுறை அணிந்தது போல புகைப்படங்களைப் பார்க்க முடியாது.

இதுவரை 700 நாட்கள் பதவியில் இருந்திருக்கிறார். அந்த வகையில் 70 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இதற்கு பிரதமர் மோடியின் பதில் என்ன?

இவ்வாறு கேஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+