முதல்முறையாக டைம் பத்திரிக்கையின் அமெரிக்கா, சர்வதேச பதிப்பின் அட்டைப்படத்தில் மோடி
டெல்லி: டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் வந்துள்ளது. மேலும் பத்திரிக்கையில் மோடி அளித்த பேட்டி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்பம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பத்திரிக்கையில் மோடியின் பேட்டி வெளியாகியுள்ளது.
பத்திரிக்கையில் வெளியிட சுமார் இரண்டு மணிநேரம் மோடியிடம் பேட்டி எடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,

முக்கியத்துவம்
ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். அனைத்து மதங்கள், சமூகங்களுக்கு சம உரிமை உள்ளது. அவர்களுக்கு பூரண பாதுகாப்பு கிடைக்கச் செய்வது என் பொறுப்பு. அரசியலமைப்பு சட்டம் தான் அரசின் புனித நூலாகும்.

பாகுபாடு
மதம், சாதி, இனம் ஆகியவற்றை கொண்டு ஏற்படுத்தப்படும் எந்த ஒரு பிரிவினையையும் என் அரசு ஏற்றுக் கொள்ளாது. தீவிரவாதத்தை எதிர்த்து போரிட அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்.

சீனா
இந்தியா மற்றும் சீனா மெச்சூராக நடந்து கொள்கின்றன. பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவுகிறது. இந்த நூற்றாண்டின் காலிறுதி வரை ஒரு முறை கூட துப்பாக்கிச்சூடு நடந்தது இல்லை. வரலாற்றில் இருந்து இரு நாடுகளும் பாடம் கற்றுக் கொண்டதை இது காட்டுகிறது.

சர்வாதிகாரி
இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அது எங்கள் மரபணுவில் உள்ளது. இந்தியாவை ஆட்சி செய்ய சர்வாதிகாரி தேவை இல்லை. ஜனநாயகமா அல்லது செல்வம், அதிகாரம், புகழா என்று கேட்டால் நான் ஜனநாயகத்தையே தேர்வு செய்வேன்.

அமெரிக்கா
இந்தியாவும், அமெரிக்காவும் இயற்கையாகவே நட்பு நாடுகள் ஆகும். இந்தியாவால் அமெரிக்காவுக்கு என்ன செய்ய முடியும், அமெரிக்காவால் இந்தியாவுக்கு என்ன செய்ய முடியும் என பார்க்கக் கூடாது. இந்தியாவும், அமெரிக்காவும் சேர்ந்து உலகிற்கு என்ன செய்ய முடியும் என பார்க்க வேண்டும்.

ஏழை
நான் சிறுவனாக இருந்தபோது ரயில்வே நிலையத்தில் டீ விற்றேன். என் தாய் வீடுகளில் பாத்திரம் கழுவி என்னை வளர்த்தார். நான் வறுமையில் வளர்ந்தவன். வறுமை தான் எனக்கு இன்ஸ்பிரேஷன் என்றார் மோடி.

அட்டைப்படம்
டைம் பத்திரிக்கையின் அமெரிக்கா மற்றும் சர்வதேச பதிப்புகளின் அட்டைப்படத்தில் மோடியின் புகைப்படம் வந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். முன்னதாக அவரின் புகைப்படம் டைம் ஆசியா பதிப்பின் அட்டைப்படத்தில் வந்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம்












Click it and Unblock the Notifications