பாஜக ஆட்சிக்கு வந்தால் கிரிமினல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டுக்குள் சிறை: மோடி
காந்திநகர்: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் குற்றம்புரிந்த எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்கள் ஓராண்டுக்குள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று அக்கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் தலைநகர் காந்திநகரில் இருந்தபடி 15 மாநிலங்களில் உள்ள 100 இடங்களில் 3டி தொழில்நுட்பம் மூலம் மோடி நேற்று பிரசாரம் செய்து பேசியதாவது:
அரசியல், குற்றவாளிகள் மயமாவது வருத்தத்தை அளிக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு. காங்கிரஸ் தலைவர்கள்தான் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக குற்றவாளிகளை முதலில் பயன்படுத்த தொடங்கினர்.

பிறகு அக் குற்றவாளிகளே சக்திவாய்ந்த அரசியல்வாதிகளாக மாறிவிட்டனர். அதுபோன்ற குற்றவாளிகளின் பிடியில் இருந்து அரசியல் விடுவிக்கப்பட வேண்டும்.
அரசியலை குற்றவாளிகளின் பிடியில் இருந்து விடுவிக்க எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். குற்றம்புரிந்த அனைத்து எம்.பி. மற்றும் எம்எல்ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி சிறப்பு நீதிமன்றங்களை ஓராண்டில் அமைப்பேன். அதன்பிறகு அவர்கள் அனைவரும் சிறைக்கு அனுப்பப்படுவார்கள்.
பின்னர் ஊராட்சி அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன். இதுபோன்று 5 ஆண்டுகளில் நடவடிக்கைகளை எடுத்து, அரசியலை குற்றவாளிகளின் பிடியில் இருந்து நான் விடுவிப்பேன் என்று உறுதி அளிக்கிறேன். பாஜகவினராக இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications