மோடி அலை அடங்கி புஸ்ஸாகிடும்: சொல்கிறார் ப. சிதம்பரம் மீது ஷூ வீசியவர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மோடி அலை விரைவில் அடங்கிவிடும் என்று ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவர் மீது ஷூவை வீசிய பத்திரிக்கையாளரும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளருமான ஜர்னைல் சிங் தெரிவித்துள்ளார்.

Jarnail Singh

கடந்த 2009ம் ஆண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ வீசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் பத்திரிக்கையாளரான ஜர்னைல் சிங். அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் அவர் நாட்டில் மோடி அலை வீசுவதாக கூறப்படுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எனக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது இல்லை. ஆனால் அரவிந்த்ஜி மற்றும் பிற ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுடன் பேசிய பிறகு அநீதிக்கு எதிராக போராட அவர்களின் அரசியல் முறையால் முடியும் என்பதை உணர்ந்தேன்.

மக்கள் மாற்றத்திற்காக ஏங்கிக் கிடக்கிறார்கள். விரைவில் மோடி அலை எல்லாம் அடங்கிவிடும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+