மோடி 3வது முறை பிரதமர் ஆவார்.. 400 இடங்களில் 2024 தேர்தலில் பாஜக வெல்லும் - சொல்வது மத்திய அமைச்சர்
ஜெய்பூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அக்கட்சி 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் எனவும் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உறுதியாக தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஒன்பதரை ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியை கைப்பற்றிய பாஜக, 2019 மக்களவைத் தேர்தலிலும் வென்று 2 வது முறையாக ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசின் பதவிகாலம் நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான முயற்சிகளில் கடந்த ஓராண்டுக்கு முன்பாகவே எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியான பாஜகவும் இறங்கிவிட்டன.

இந்த நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ராஜஸ்தானில் செயல்பாட்டாளர்கள் அம்மாநில மக்கள் கஷ்டப்பட்டனர். தேர்தல் நேரத்தில் மக்கள் தற்போதைய அரசை நிராகரிப்பார்கள் என்று நான் சொல்லி இருந்தேன். அவர்கள் பிரதமர் மோடி வாக்குறுதிகளின் மீது மக்கள் நம்பிக்கை கொண்டனர். சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக அரசுகள் பெரும்பான்மை பலத்துடன் அமைந்து உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதிகளின் மீது கொண்ட நம்பிக்கையால் சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் பாஜக வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் அரசுகள் உருவாக்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் இதே நிலை தொடரும். பிரதமர் மோடி 3 வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார். இன்று 2024 நாடாளுமன்ற தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவோம்.” என்றார்.
வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான செமி பைனலாக மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் பார்க்கப்பட்டது. இதில் 3 இந்தி மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களிலும் பாஜக வெற்றி பெற்றது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தின் சொந்த மாநிலமான ராஜஸ்தானில் நடந்த தேர்தல்களில் பாஜக 115 இடங்களைப் பெற்று பாஜக வெற்றி பெற்றது, காங்கிரஸ் 69 இடங்களுடன் இரண்டாவது இடத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications