அரசியல் லாபத்திற்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார் மோடி.. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

அமராவதி: பிரதமர் மோடி அரசியல் லாபத்திற்காக யாரையும் அழிக்க தயங்கமாட்டார் என ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டைகூறியுள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார். அதில் இந்த மக்களவை தேர்தலில் மோடியை மக்கள் நிராகரிப்பது நிச்சயம். ஜனநாயகத்தன்மையற்று, சர்வாதிகார தன்மையுடன் செயல்படும் மோடி தலைமையிலான அணி தோல்வியுறும்.

Modi will destroy anyone for political gain.. Chandrababu Naidus allegation

பிரதமர் மோடி எங்களுக்கு நீதி கற்றுத்தர முயற்சித்து வருகிறார். ஆனால் அவர் கூறுவதற்கு மாறாக நடப்பதை தான் வழக்கமாக வைத்துள்ளார். தனது அரசியல் ஆதாயத்திற்காக ராணுவத்தையும், பாதுகாப்பு துறையையும் தவறாக பயன்படுத்தி உள்ளார்.

நாட்டில் மத மோதல்களை மோடி உருவாக்குகிறார். இதுவரை நாடு கண்டிராத மோசமான ஆட்சியை நடத்தும் மோடி, ஜனநாயக அமைப்புகள் அனைத்தையும் சீரழித்துவிட்டார்.

இந்திய ஜனநாயகத்தை கொன்றதற்காக மோடியும், அவரது அணியினரும் மக்களால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட உள்ள நாள் தான் மே 23. தேர்தல் ஆணையம் பாரதிய ஜனதாவின் உத்தரவை ஏற்று செயல்படும் ஆணையமாக மாறிவிட்டது. ஆணையத்திலுள்ள முக்கிய அதிகாரிகள் மோடி, அமித் ஷாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்.

இவர்கள் இருவரும் தேர்தல் விதிமுறைகளை மீறினால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதை நாடே பார்த்து கொண்டு தான் உள்ளது. மோடி தனது அரசியல் ஆதாயத்துக்காக யாரை வேண்டுமானாலும் அழிப்பார். அழிந்தவர்களை மீண்டும் உயிர்த்தெழ செய்வார். இவ்வாறு பல அரசியல் தலைவர்களை அழித்துள்ளார் என சந்திரபாபு நயுடு சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்

முன்னதாக எதிர்க்கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தெரிவித்த புகாருக்கு தனது விக்கெட்டை இழந்ததற்கு நடுவரை குறை கூறுவது போல் உள்ளதாக விமர்சித்திருந்தார் அதற்கு பதிலடி தரும் வகையில் தற்போது சந்திரபாபு பிரதமரை தாக்கி கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+