ஷமிக்கும் தனக்கும் என்ன தொடர்பு.. சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி!
சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண், ஷமிக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பேட்டி அளித்துள்ளார்.
Recommended Video

டெல்லி: சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா என்ற பெண், ஷமிக்கும் அவருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து பேட்டி அளித்துள்ளார்.
ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். முதலில் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.
ஷமி சூதாட்டம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார். ஷமி மீது போலீசில் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

சூதாட்டம்
ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவரது மனைவி கூறியுள்ளார். இதற்காக அவர் அலீஷ்பா என்ற பாகிஸ்தான் பெண்ணுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லியுள்ளார். முகமது பாய் என்ற சூதாட்டக்காரர் அலீஷ்பா மூலம் ஷமியிடம் பணம் கொடுப்பார் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பிரச்சனை கடந்த 3 வருடங்களாகவே நடந்து வந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

நாங்கள் வெறும் நண்பர்கள்
தற்போது இதுகுறித்து அலீஷ்பா பேட்டி அளித்துள்ளார். அதில் ''நானும் ஷமியும் நல்ல நண்பர்கள். ஷமியின் மனைவி கூறுவது போல எங்களுக்குள் எந்த விதமான மோசமான தொடர்பும் இல்லை. அவர் ஏன் அப்படி குற்றச்சாட்டு வைக்கிறார் என்று தெரியவில்லை. போலீஸ்தான் இதில் விசாரிக்க வேண்டும்'' என்றுள்ளார்.

எப்படி நண்பர்கள் ஆனார்கள்
மேலும் ''நாங்கள் பேஸ்புக் மூலம் நண்பர்கள் ஆனோம். அவரை எனக்கு மூன்று வருடமாக தெரியும். முதலில் ரசிகையாக இருந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக பேசி தற்போது நண்பர்கள் ஆகியுள்ளோம். எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை'' என்றுள்ளார்.

துபாயில் சந்தித்தோம்
மேலும் துபாயில் ஷமியை சந்தித்ததை அலீஷ்பா ஒப்புக்கொண்டு இருக்கிறார். ''நான் அங்கு சென்று இருந்த போது, ஷமியும் அங்கு வந்து இருந்தார். அப்போது சந்தித்துக் கொண்டோம். இது எதிர்பாராமல் நடந்த சந்திப்பு'' என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications