கள்ளத்தொடர்புகள், துன்புறுத்தல்கள்.. போலீசில் மனைவி புகார்.. பெரும் சிக்கலில் ஷமி
Recommended Video

கொல்கத்தா: கொடுமைப்படுத்தியதாகவும், பிற பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும், கொல்கத்தா காவல் நிலையத்தில் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மனைவி ஹசின் ஜகான் புகார் அளித்துள்ளார்.
ஷமி பாகிஸ்தான் உட்பட பல நாட்டு பெண்களுடன் ஆபாசமாக சாட் செய்த டெலிபோன் உரையாடல்களை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ஹசின் ஜகான், அடுத்தகட்ட நடவடிக்கையாக காவல் துறை உதவியை நாடியுள்ளார்.
தெற்கு கொல்கத்தாவில் ஷமி வீடு அமைந்துள்ளது. இந்த நிலையில் கமிஷனர் அலுவலகத்தில் ஹசின் ஜகான் புகாரை பதிவு செய்துள்ளார்.

ஆபாச சாட்
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், நான் வெளியிட்ட சாட் விவரங்களே ஆபாசமாக உள்ளது என்கிறார்கள். இதைவிட மோசமான வீடியோ சாட்களை முகமது ஷமி செய்துள்ளார். அதை நான் இன்னும் வெளியிடவில்லை. ஆபாச சாட்டுகள் மட்டுமின்றி, என்னை அடித்தும் துன்புறுத்தியுள்ளார். இதுகுறித்தெல்லாம் புகாரில் தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.

ஷமி மறுப்பு
இருப்பினும் புகாரில் உள்ள அம்சங்கள் குறித்து போலீசார் தகவல்களை வெளியிடவில்லை. ஆனால் ஷமி நேற்று டிவிட்டரில் இந்த தகவல்களை மறுத்திருந்தார். தனது கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்க சதி நடப்பதாக கூறியிருந்தார்.

ஒப்பந்த பட்டியல்
பிசிசிஐ வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் முகமது ஷமி திடீரென பெயர் இடம்பெறவில்லை. சி மற்றும் பி வீரர்கள் பட்டியலில் இதுவரை இடம்பெற்று வந்தார். ஆனால் இந்த சர்ச்சைகளால் அவரது பெயர் பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாால் முகமது ஷமிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

சர்ச்சைகள்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆபாச சர்ச்சைகளில் சிக்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. குல்தீப் யாதவ், சகஹல் ஆகியோர் சோஷியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இப்போது, முகமது ஷமி மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications