முதல் திருமணத்தை மறைத்து என்னை மணந்தார் ஹசின்... முகமது ஷமி எதிர் குற்றச்சாட்டு!
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் சொந்த வாழ்க்கையில் இன்று மற்றொரு புதிய விஷயம் அம்பலமாகியுள்ளது. ஹசின் ஜஹான் தனக்கு ஏற்கனவே நடந்த திருமணத்தை மறைத்து தன்னை மணந்ததாக ஷமி கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவருடைய மனைவி ஹசின் ஜஹான் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்த நிலையில் ஹசின் தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என்று ஷமி எதிர்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் குடும்பத்தினர் வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினர், ஷமி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான். ஷமிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், ஷமியின் தொலைபேசியில் பெண்களுடன் சேட் செய்தவற்றையும் ஹசின் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இது மட்டுமின்றி ஷமி மீது ஜாதவ்புர் காவல் நிலையத்தில் ஹசின் புகாரும் அளித்துள்ளார். இந்நிலையில் முகமது ஷமி ஹசின் மீது புதிய குற்றசாட்டுகளை முன் வைத்துள்ளார். தனக்கும் ஹசின் ஜஹானுக்கும் திருமணமான போது அவர் ஏற்கனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாக ஷமி கூறியுள்ளார்.

முதல் திருமணத்தை மறைத்தார்
"ஹசின் ஜஹானுக்கு 2014ம் ஆண்டில் என்னுடன் திருமணம் நடக்கும் முன்னரே முதல் திருமணம் நடந்து 2 மகள்கள் உள்ளனர். ஆனால் அதை அவர் ரகசியமாகவே வைத்திருந்தார். ஹசின் தன்னுடைய 2 மகள்களையும் தனது சகோதரியின் மகள்கள் என்றே எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்" என்றும் ஷமி தெரிவித்துள்ளார்.

யாரும் மிரட்டவில்லை
ஆனால் திருமணமான சில நாட்களுக்குப் பிறகே எனக்கு ஹசின் ஏற்கனவே திருமணமானவர் என்றும் 2 பெண் பிள்ளைகளின் தாய் என்பதும் தெரிய வந்தது என்று ஷமி கூறியுள்ளார். தொலைபேசியில் தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக ஹசின் கூறும் குற்றச்சாட்டுகளை ஷமி முற்றிலுமாக மறுத்தார்.

மகளின் எதிர்காலத்திற்காக
நான் ஹசினுடன் சாமாதானமாக செல்லவே விரும்புகிறேன். நான் இந்த விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறேன், ஆனால் ஹசின் என்னை தொடர்ந்து மிரட்டி வருகிறார். என்னுடைய மகளின் எதிர்காலத்தை நினைத்து நான் வருத்தப்படுகிறேன் என்றும் ஷமி தெரிவித்துள்ளார்.

தவறாக வழிநடத்துகின்றனர்
ஷமி மற்றும் அவரது குடும்பத்தார் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார், ஹசின் ஜஹானை யாரோ தவறாக வழிநடத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications