பிக் பாஸ் வீட்டில் ’ஹோமோ’ ஜோடி! உனக்கு பிடிக்கலைனா வெளியே போ! சக போட்டியாளரை விளாசிய மோகன்லால்!
திருவனந்தபுரம்: மலையாளத்தில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் தன் பாலின ஈர்ப்பாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய சக போட்டியாளரைக் கண்டித்துள்ளார் நடிகர் மோகன்லால். தன்பாலின ஜோடிகளுக்கான அங்கீகாரத்தை நீதிமன்றமே வழங்கி இருக்கும் நிலையில் அவர்களுடன் இருக்க விருப்பம் இல்லை என்றால் தாராளமாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என இன்னொரு போட்டியாளரை விளாசி இருக்கிறார்.
இந்தியா முழுவதும் பிரபலமான நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்கிறது. தமிழைப் போலவே மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. மலையாளத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழில் இன்னும் நிகழ்ச்சி தொடங்காத நிலையில், பிற மொழிகளில் 3, 4 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

பிக் பாஸ் மலையாளம்
தற்போது அந்த நிகழ்ச்சிதான் சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆதிலா, நூரா ஆகிய தன் பாலின தம்பதிகளும் சக போட்டியாளர்களுடன் பங்கேற்றிருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் லட்சுமி, மஸ்தானி போன்ற பிரபலங்களும் இந்த போட்டியில் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஆதிலா மற்றும் நூறா ஆகியோர் ஒரு மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
மோகன்லால்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரை லட்சுமி, மஸ்தானி ஆகியோர் ஆதீலா மற்றும் நூராவை நன்றாகத்தான் பேசி வந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே தன் பாலின தம்பதிகள் குறித்து லட்சுமி மற்றும் மஸ்தானி விமர்சனம் செய்து பேசியது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது ஆதிலா மற்றும் நூரா போன்ற தன் பாலின ஈர்ப்பாளர்களை வீட்டுக்குள் கூட விடமாட்டேன் என லட்சுமி பேசியது கடும் விமர்சனத்தைப் பெற்றது.
ஆதிலா நூறா தம்பதி
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சனிக்கிழமை வெளியான வார இறுதி எபிசோடில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும் நடிகருமான மோகன்லால். நிகழ்ச்சியில் பேசிய அவர், "தன் பாலின ஜோடிகளுக்கான அங்கீகாரத்தை நீதிமன்றமே வழங்கி இருக்கிறது. எங்களால் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் பல லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டு நன்கு படித்து ஒரு பிரபல நிறுவனத்தில் வேலை செய்கிறார்கள். மேலும் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டுதானே இந்த வீட்டிற்குள் வந்தார்கள்.
மோகன்லால் கண்டனம்
பிறகு எப்படி சக மனிதரைத் தரக்குறைவாகப் பேச முடிந்தது. இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. மேலும் அவர்களுக்கு வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை. உங்களால் அவர்களுடன் இருக்க விருப்பமில்லை என்றால் தாராளமாக நிகழ்ச்சியை விட்டு வெளியேறலாம். உங்கள் வீட்டுக்குள் நீங்கள் விடவில்லை என்றால் என்ன? என் வீட்டுக்குள் அவர்களை நான் விடுவேன்" என விளாசி இருக்கிறார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் மோகன்லாலுக்கு ஆதரவு குவிந்து வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications