திடீரென கொட்டிய பண மழை.. அதுவும் முழுக்க 500 ரூபாய் நோட்டுகள்.. அள்ளி சென்ற மக்கள்.. ஆனாலும் பாவம் அனுபவிக்க முடியல!

Subscribe to Oneindia Tamil

புபனேஷ்வர்: சாலையில் சாதாரணமாகச் சென்று கொண்டிருக்கும் போது திடீரென 500 ரூபாய் நோட்டுகள் பண மழையாகப் பெய்தால் எப்படி இருக்கும். அப்படியொரு சம்பவம் தான் இங்கு புவனேஷ்வரில் நடந்துள்ளது. இதற்கு என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்.

நீங்கள் சாலையில் சாதாரணமாக நடந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள். அப்போது திடீரென பண மழை கொட்டினால் எப்படி இருக்கும். அதுவும் முழுக்க முழுக்க 500 ரூபாய் நோட்டுகள் அந்த பண மழையில் விழுந்தால் எப்படி இருக்கும். நல்லா தான் இருக்கும்.. ஆனால் இதெல்லாம் நடக்கிற காரியமா என நீங்கள் கேட்கலாம்.. உண்மையில் இதுபோன்ற ஒரு சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது.

Money Rain full of 500 rs note in Odisha Know the reason
Photo Credit:

பண மழை

ஒடிசாவில் ஒரு பகுதியில் திடீரென பண மழை கொட்டியிருக்கிறது. முழுக்க முழுக்க ரூ.500 நோட்டுகள் வானத்தில் இருந்து விழுந்த நிலையில், அதை எடுக்கப் பலரும் ஓடிச் சென்றுள்ளனர். ஆர்வமாக அந்த பணத்தை எடுத்து உள்ளேயும் போட்டுக் கொண்டனர். ஆனால், பாவம் அந்த பணத்தை அவர்களால் கையோடு வைத்திருக்க முடியவில்லை. ஏன் அப்படி அங்கு என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக ரூ.500 நோட்டுகளின் கட்டுகளை வெளியே வீசியுள்ளார். அதுதான் சாலையில் சென்ற நபர்களுக்கு பணமழையாக இருந்துள்ளது. அது சரி, இவர் ஏன் ரூ.500 தாள்களைத் தூக்கி வெளியே வீசினார் என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

யார் அவர்

அந்த நபர் ஒடிசா மாநிலத்தில் வேலை செய்யும் அரசு ஊழியர் ஆவார். அந்த நபர் மாநில ஊரக வளர்ச்சித் துறையில் தலைமைப் பொறியாளராக உள்ள பைகுந்த நாத் சாரங்கி என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஊழல் மற்றும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது உள்ளிட்ட வழக்குகளில் அவருக்குத் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் ரூ.2 கோடிக்கும் அதிகமான பணத்தை அரசு மீட்டுள்ளது. அப்போது தான் அதிகாரிகளிடம் இருந்து தப்பிக்க அந்த நபர் பணத்தை ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ளார்.

ஒடிசாவில் ஒரே நேரத்தில் அங்குள்ள புவனேஸ்வர் மற்றும் புரி ஆகிய நகரங்களில் ஏழு இடங்களில் நடத்தப்பட்ட ரெய்டில் சுமார் ரூ.2.1 கோடி ரொக்கத்தை விஜிலென்ஸ் அதிகாரிகள் மீட்டனர். அவரது வீடு, 4 பிளாட்கள், அவருக்குச் சொந்தமான கட்டிடம், உறவினர் வீடு மற்றும் அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டறியப்பட்டுள்ளது.

அனுபவிக்க முடியல

அப்போது விஜிலென்ஸ் அதிகாரிகள் வந்தபோது, ​​சாரங்கி தனது வீட்டின் ஜன்னலில் இருந்த வெளியே பண மூட்டைகளை வீசி எரிந்தார். அதை அங்கிருந்த சிலர் எடுத்ததாகக் கூறப்படுகிறது.. இருப்பினும், அதைக் கண்காணித்த அதிகாரிகள், உடனடியாக அதைச் சாட்சிகளோடு மீட்டனர். சாரங்கியின் வீட்டில் ரூ.1.1 கோடியும், அவரது புவனேஸ்வர் குடியிருப்பில் இருந்து ரூ.1 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டன.

அதிகாரிகள் ரெய்டு

சாரங்கி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து எட்டு டிஎஸ்பிக்கள், 12 ஆய்வாளர்கள் மற்றும் ஆறு உதவி துணை ஆய்வாளர்கள் உட்பட 26 காவல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். சோதனையின் போது அதிகாரிகள் குவித்து வைக்கப்பட்டிருந்த ரூ.500 நோட்டுகளின் மற்றும் ரூ.200 நோட்டுகள் எண்ணும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+