6 வயது சிறுமி பலாத்கார முயற்சி! இளைஞரை கடித்து குதறி துரத்திய குரங்குகள்! யார் மிருகம் சொல்லுங்களேன்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பத்தில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒரு இளைஞரை குரங்குகள் கூட்டம் கடித்து குதறி விரட்டியடித்தது. இதனால் அந்த சிறுமி காப்பாற்றப்பட்டார். இதில் யார் மிருகம்? என்று இப்போது சொல்லுங்கள்.
பாக்பத்தை சேர்ந்த 6 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளியில் யூகேஜி படித்து வருகிறார். இந்த சிறுமி வீட்டு வாசலில் தனியாக விளையாடி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இளைஞர் ஒருவர், சிறுமியை தூக்கிக் கொண்டு பாழடைந்த வீட்டிற்குள் சென்றார்.

அங்கு சிறுமியின் ஆடைகளை அவிழ்ந்த அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். சிறுமியின் சப்தம் கேட்டது. அப்போது அங்கு உணவுத் தேடி வந்த குரங்குகள் கூட்டம் அந்த நபரை கடித்து குதறி துரத்திவிட்டது.
இதனால் அந்த சிறுமி பலாத்கார முயற்சியிலிருந்து காப்பாற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து தனது தாய், தந்தை வீடு திரும்பியதும் நடந்தவற்றை எல்லாம் அந்த சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், என் மகள் தனியாக வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது சிறுமியை பாழடைந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்ற அவர், குழந்தையின் ஆடைகளை நீக்கிவிட்டு பாலியல் பலாத்கார செயலில் ஈடுபட்டுள்ளார். நல்ல வேளையாக அங்கு வந்த குரங்குகள் கூட்டம் அந்த நபரை கொடூரமாக தாக்கி துரத்திவிட்டது.
அங்குள்ள சிசிடிவி காட்சியில் அந்த நபர் என் மகளுடன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவரை போலீஸார் தேடி வருகிறார்கள். இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவதாக என் மகளை மிரட்டியுள்ளார். அந்த இடத்திற்கு குரங்குகள் மட்டும் வராமல் இருந்திருந்தால் என் மகளை நான் உயிருடன் பார்த்திருக்கவே முடியாது என கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நபர் மீது போக்சோ சட்டம் பதிவு செய்யப்பட்டு தேடி வருகிறார்கள். இப்போது சொல்லுங்கள் இந்த விவகாரத்தில் யார் மிருகம். குழந்தையை குழந்தையாக பாவிக்காமல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் வெறிபிடித்த அந்த நபர்தான் மிருகம். குரங்குகள் எத்தனை மனசாட்சியுடன் அந்த குழந்தையை காப்பாற்றியிருக்கின்றன?
-
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications