மும்பையில் வெளுத்து வாங்கும் கன மழை.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு!
மும்பை: ஒரு வழியாக மும்பைக்கு தென் மேற்குப் பருவ மழை வந்து விட்டது. இன்று மும்பை நகரை கன மழை ஸ்தம்பிக்க வைத்து விட்டது. இதனால் போக்குவரத்தும் பல பகுதிகளில் பாதிக்கப்பட்டது.
மும்பை மட்டுமல்லாமல், மேற்கு மற்றும் கடலோர மகாராஷ்டிராவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. கடும் கோடையால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு இந்த மழை பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.

கடந்த 3 வாரங்களாகவே பருவ மழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் மகாராஷ்டிர மக்கள் இருந்து வந்தனர். ஜூன் 10ம் தேதியே மழை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மிகவும் தாமதமாக இப்போது தொடங்கியுள்ளது.
இன்று பெய்த கன மழையால் மும்பையின் பல பகுதிகளிலும் மழை நீர் வெள்ளம் போல ஓடியது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகள் பல வெள்ள நீரில் மிதக்கின்றன.
கடும் மழை காரணமாக பல மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
கிழக்கு எக்ஸ்பிரஸ் மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்த மழை குறித்து பிராந்திய வானிலை மைய இயக்குநர் வி.கே.ராஜீவ் கூறுகையில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக மழை பெய்துள்ளது. இது இன்னும் சில நாட்களுக்குத் தொடரும் என்றார்.
Heavy rain lashed Mumbai and large parts of coastal and western Maharashtra on Wednesday, providing welcome relief from the extended summer in the city. Though delayed by over three weeks - the normal date for onset of monsoon is June 10 - the steady downpour today resulted in water-logging in low-lying areas and created disruptions in road and rail traffic within the city and outside. Most low-lying areas are now submerged.












Click it and Unblock the Notifications