ஒரு கெட்ட செய்தி: 106% மழை பெய்தாலும் தண்ணீர் பஞ்சம் தீராதாம்!
டெல்லி: இந்த ஆண்டு 106 சதவீதம் மழை பெய்தாலும் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் தீராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கிறது. மக்கள் பருவமழையை எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு பருவ மழை காலத்தில் 106 சதவீதம் மழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்கள் மனதை குளிர வைத்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து வாட்டர்எய்ட் இந்தியாவின் கொள்கை பிரிவு தலைவர் நித்யா ஜேக்கப் கூறுகையில்,

பல்வேறு இடங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. அதனால் 106 சதவீதம் மழை பெய்தாலும் தண்ணீர் பஞ்சம் தீராது. கடந்த இரண்டு முறை பருவமழை காலங்களில் போதிய மழை பெய்யவில்லை. அதனால் நில்லத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது. மக்கள் குடிக்கக் கூட நீர் இல்லாமல் அல்லாடி வருகிறார்கள் என்றார்.
இந்தியாவில் உள்ள முக்கிய நீர்நிலைகள் 79 சதவீதம் காலியாக உள்ளது. மேலும் 75 சதவீத ஆறுகளிலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைவாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு பருவமழை வெளுத்து வாங்கினாலும் தண்ணீர் தேவை முழுவதுமாக தீர்ந்துவிடாது.
இதற்கிடையே கொளுத்தும் வெயிலை தாங்க முடியாமல் இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications