வானிலை அப்டேட்: மும்பைக்கு கனமழை- கேரளா மீனவர்களுக்கு எச்சரிக்கை
மும்பைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video

டெல்லி: மும்பை, தானே நகரங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கேரளா, லட்சத்தீவு மீனவர்கள் அரபிக் கடல் மற்றும் கொங்கன் கோவா கடற்பரப்பில் ஜூன் 8 முதல் 12-ந் தேதி வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய அரபிக் கடல், கர்நாடக கடலோர பகுதிகள், கர்நாடகாவின் தெற்கு உள் மாவட்டங்கள், கோவா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும். மகாராஷ்டிரா கடலோர பகுதிகள், கோவா தென்மேற்கு பருவமழை மிக தீவிரமாக இருக்கும்.

ரத்னகிரி, சிந்துதுர்க், மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் ஜூன் 9-ந் தேதியன்று மிக அதிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை உள்ளிட்ட 6 மாவடங்களில் ஜூன் 10,11 ஆகிய நாட்களில் மிக அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரபிக் கடல், கோவாவின் சில பகுதிகள், தெற்கு மகாராஷ்டிரா பகுதிகள், கர்நாடகா ராயலசீமா பகுதிகள், தெலுங்கானாவின் சில பகுதிகள், கடலோர ஆந்திரா, மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தென்மேற்கு பருவமழையின் தாக்கம் தீவிரமாக இருக்கும் என்கிறது இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கை.
உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோ உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ, ஹர்தோய், சிதாபூர், பாராபாங்கி, உன்னாவ் மாவட்டங்களில் இடியும் மழை பெய்யும் என லக்னோ வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

மும்பையில் வியாழக்கிழமை மாலை பெய்த மழை இயல்பு வாழ்க்கையை பாதித்தது. உள்ளூர் ரயில் சேவைகள் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டன. விமான சேவையும் பாதிக்கப்பட்டது. சாந்தாகுரூஸ் விமான நிலைய பகுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ மழை பதிவாகி இருந்தது. கொலாபா பகுதியில் 27.6 மி.மீ மழை பதிவாகி இருந்தது. மும்பைவாசிகள் 1916 என்கிற எண்ணுக்கும் மும்பை தவிர்த்த இதர பகுதியினர் 1077 என்ற எண்ணுக்கும் அவசர உதவிகளை கேட்டுப் பெறலாம்.
இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையின்படி, மத்திய இந்திய பகுதிகள் வழக்கமான மழையைப் பெறும். ஆனால் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளாக கர்நாடகா, தெலுங்காக, ஆந்திரா, தமிழகம், கேரளா மற்றும் புதுவை மாநிலங்கள் வழக்கத்துக்கும் குறைவான மழையைப் பெறும் என தெரிவித்துள்ளது.
வடகிழக்கு இந்தியாவில் வழக்கத்தையும் விட மிக குறைவான மழை பெய்யும். ஜூலை மாதத்தில் நாடு முழுவதும் மழையின் அளவு 101% இருக்கும். ஆகஸ்ட்டில் 94% ஆக இருக்கும். மழைப்பொழிவு 90%- 96% என்பது வழக்கத்தைவிட குறைவு. 96%-104% என்பது வழக்கமான மழைப் பொழிவு. 104%-110% என்பது வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு. 110%-க்கு அதிகம் என்பது மிக அதிக மழைப்பொழிவாக கருதப்படும்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications