குஜராத்தின் பல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
குஜராத்தின் பல பகுதிகளில் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லி: குஜராத்தின் ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தின் ஒரு சில இடங்கள், விதர்பா, சத்தீஷ்கர், கொங்கன் கோவா உள்ளிட்ட இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல் தெலுங்கானாவிலும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு கடலோ கர்நாடாக, கேரளா, சவுராஷ்ட்ரா, மத்திய மகாராஷ்டிரா, கிழக்கு மத்திய பிரதேசம், ஒடிசா, கடலோர ஆந்திரா, ஜம்மு காஷ்மீர், வடக்கு உள் கர்நாடகா, இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசா கடற்பகுதியில் குறைந்த காற்றழுத்தம் உருவாகியிருப்பதாகவும் அடுத்த 48 மணிநேரத்தில் இது மேற்கு நோக்கி நகர்ந்து மத்திய இந்திய பகுதியில் நிலைகொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 19ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.அரபிக் கடல் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.


Click it and Unblock the Notifications
