இந்தியாவில் இந்தாண்டு பருவமழை 42% குறைவாகவே பெய்யும்– வானிலை மையம்
டெல்லி: இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவமழையின் அளவானது 42 சதவீதம் குறைவாகவே இருக்கும் என்று மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நாட்டில் அமைந்துள்ள அனைத்து முக்கிய பெருநகரங்களிலும், குறிப்பாக டெல்லி, சென்னை போன்ற நகரங்களில் வெயில் கொளுத்தித் தள்ளுகின்றது.
பெய்ய வேண்டிய பருவமழை சரியான நேரத்தில் பெய்யாமல் வறண்ட வானிலையே நிலவிவருகின்றது.

குறையும் பருவமழை:
இதுபற்றி டெல்லியில் அமைந்துள்ள மத்திய வானிலை ஆய்வுமைய இயக்குனர் பி.பி.யாதவ், "இந்தியாவைப் பொறுத்தவரை இந்த ஆண்டு பருவமழையின் அளவு வெறும் 42 சதவீத அளவிலேயே இருக்கும்.

நீர் அளவும் திருப்தியில்லை:
நீர் பிரதேசங்களின் தண்ணீர் அளவும் மிகவும் சிறிதளவே அதிகரித்துள்ளது.

நீடிக்கும் வறண்ட வானிலை:
அதற்கு மேல் மழைபொழிவிற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற நிலை கடந்த 100 ஆண்டுகளில் 4 அல்லது 5 முறை நிகழ்ந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

ஆகஸ்டில் மழை துவங்கும்:
மேலும், அடுத்த மாதம் 2 ஆம் வாரத்தில் இருந்து பருவமழை துவங்கும் என்றும், ஆகஸ்டில் நல்ல மழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 37 சதவீதம் அதிகரிப்பு:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை மழைஅளவானது, 37 சதவீதம் அதிகரித்து காணப்பட்டிருந்தது. மேலும், 2009 ஆம் ஆண்டிற்குப் பின் இந்த ஆண்டுதான் மழை அளவு மீண்டும் 54 சதவீதத்திற்கு மேல் வீழ்ச்சி அடைந்துள்ளது.

விவசாயம் பாதிக்கும்:
இந்தியாவின் வடமேற்கு பகுதியில் பருவமழை பெய்தாலும், 15 சதவீத பற்றாக்குறையே நிலவும். விவசாயத்தின் அளவு 44 சதவீதம் வரை பாதிக்கப்படலாம் என்றும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
கரும்பு - பருத்தி உற்பத்தி பாதிக்கப்படும்:
கரும்பின் உற்பத்தி 7.4 சதவீதமும், பருத்தியின் உற்பத்தி 48 சதவீதமும் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications