உத்தர பிரதேசம்.. எதிர் கட்சிகள் கூட்டணி அமைத்தால் பாஜகவிற்கு பின்னடைவு.. ஏபிபி சர்வே
நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் உத்தர பிரதேசத்தில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
Recommended Video

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் உத்தர பிரதேசத்தில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.
தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைத்தும், அடுத்து நடக்க உள்ள தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.
இதில் முக்கியமாக நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றிபெறுவார்கள் என்று மாநில வாரியாக கருத்து கணிப்பு செய்துள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் உத்தர பிரதேசத்தில் யார் அதிக இடங்களை பெறுவார்கள் என்று ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது.

கூட்டணி அமைத்தால்
அங்கு மாநில கட்சிகள் கூட்டணி அமைத்தால் பாஜக கூட்டணி மிக குறைவான இடங்களையே பெறும் என்று கூறப்பட்டுள்ளது.பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி அமைத்தால் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உ.பி.யில் பின்னடைவு ஏற்படும். காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு உ.பி.யில் 56 தொகுதிகள் கிடைக்கும். முக்கட்சிகள் கூட்டணி அமைத்தால் பாஜக கூட்டணி 24 தொகுதிகள்தான் வெல்ல முடியும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
|
இரண்டு
அதே சமயம் பகுஜன் சமாஜ்-சமாஜ்வாதி கூட்டணி காங்கிரஸ் கட்சியுடன் சேராமல் 2 மட்டும் சேர்ந்து கூட்டணி அமைத்தால் அதற்கு 42 இடங்கள் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 36 இடங்கள் கிடைக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு 2 இடங்கள் கிடைக்கும்.

மூன்றாவது வகை
மூன்றாவதாக ஒருவேளை அனைத்து கட்சிகளும் தனி தனியாக நின்றால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு நடந்ததே உத்தர பிரதேசத்தில் நடக்கும். அங்கு பாஜக 70 இடங்களில் வெற்றிபெறும். மீதமுள்ள 10 இடங்களை மூன்று கட்சிகள் சரிபாதியாக பிரித்துக்கொள்ளும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் அந்த கட்சி 2 தொகுதிகளைத்தான் கைப்பற்றும்

ஏன் முக்கியத்துவம்
இந்தியாவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டது உத்தர பிரதேசம் என்பதால் இந்த கருத்து கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications