மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததால் மகனை கொன்று தாயும் தற்கொலை!
மைசூரு: மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்ததால் குடும்பத்துக்கு ஆகாது என்று கூறி மாமியார் வீட்டினர் கொடுமை படுத்தியதால் 2 வயது குழந்தையை ஏரியில் தள்ளி கொன்ற தாய் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூரு அருகே நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு அருகேயுள்ள சிக்கபீசனஹள்ளியில் வசித்து வருபவர் மஞ்சு. இவருக்கும் லீலாவதி (22) என்ற பெண்ணுக்குமிடையே 4 வருடங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், லீலாவதி கர்ப்பமுற்றார். குழந்தைக்காக காத்திருந்த இரு குடும்பத்தாரும் இதைக்கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். 2 வருடங்களுக்கு முன்பு லீலாவதி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆண் குழந்தை பிறந்ததால் மஞ்சு குடும்பத்தார் மேலும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அந்த குழந்தைக்கு ராகுல் என்று பெயர் சூட்டப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு பிறகுதான் குழந்தை மூல நட்சத்திரத்தில் பிறந்தது தெரியவந்தது.
இதனால் மஞ்சுவின் தந்தை, தாய் மற்றும் அவரின் உறவினர்கள் அதிருப்தியடைந்தனர். மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் அந்த குடும்பம் நிர்மூலமாகிவிடும் என்ற நம்பிக்கை கர்நாடகாவின் பல குடும்பங்களில் பெருகி காணப்படுவதால் இந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. வீட்டில் ஏதாவது ஒரு பிரச்சினை ஏற்பட்டாலும், அதற்கு குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததுதான் காரணம் என்று மஞ்சுவின் குடும்பத்தார் சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
மூல நட்சத்திர நேரத்தில் குழந்தையை பெற்றதாக கூறி லீலாவதி மீதும் கரித்துக் கொட்ட ஆரம்பித்துள்ளனர் மஞ்சுவின் குடும்பத்தார். இதுகுறித்து கணவரிடம் சொல்லியும், அவர் மனைவியின் வருத்தத்தை கண்டுகொள்ளவில்லை.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட லீலாவதி, குழந்தையுடன் தற்கொலை செய்ய முடிவு செய்தார். இன்று அதிகாகாலையிலே யாருக்கும் தெரியாமல் ராகுலுடன் வீட்டை விட்டு கிளம்பிய லீலாவதி, ஊருக்கு வெளியே உள்ள ஏரிக்கு சென்றுள்ளார். முதலில் ராகுலை ஏரியில் தூக்கி வீசியுள்ளார். இதன்பிறகு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மூல நட்சத்திரத்தில் குழந்தை பிறந்தால் குடும்பம் நிர்மூலமாகும் என்று குழந்தையின் தந்தை குடும்பம் நம்பியது. இப்போது உண்மையிலேயே அந்த குடும்பம் நிர்மூலமாகியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications