Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விநாயகர் சிலை பந்தல் மீது கல்வீச்சு.. பல வருடங்களுக்கு பிறகு சூரத்தில் இப்படி ஒரு சம்பவம்.. போராட்டம்

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: சூரத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பந்தலின் மீது கல்வீசியது தொடர்பாக 6 பேர் மற்றும் அவர்களைத் தூண்டியதாக 27 பேர் என 30க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டுள்ளது. விநாயக சதுர்த்தி என்பது இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்தநாளாக இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

surat vinayagar chathurthi stone pelting

அந்த வகையில், சனிக்கிழமை காலை முதலே விநாயகர் சதுர்த்தி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. டிரம்ஸ் வாசிக்கும் விநாயகர், ஸ்விம்மிங் செய்யும் விநாயகர், 5 நிமிடத்தில் களிமண்ணால் செய்யப்படும் விநாயகர், பிரம்மாண்ட நந்தி வாகனத்தில் இருக்கும் விநாயகர், பால விநாயகர் என பல்வேறு வண்ணங்களில், பல்வேறு தீம்களில் ஒவ்வொரு பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளன. சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

ஊரெல்லாம் பந்தல்கள் அமைத்து மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் மூன்றாவது நாள் அதாவது இன்று அல்லது 5வது நாள்களில் விசர்ஜனம் செய்யப்படவுள்ளன. இந்து அமைப்புகள் சார்பில் பிரம்மாண்ட சிலைகள் நாடு முழுவதும் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. போலீஸார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலம், சூரத்தில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை பந்தலின் மீது கல்வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கல்வீசியது தொடர்பாக 6 பேர் மற்றும் அவர்களைத் தூண்டியதாக 27 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சூரத்தின் சையத்புரா பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் பந்தலின் மீது ஞாயிற்றுக்கிழமை மாலை கற்கள் வீசப்பட்டதாக பரவிய தகவலையடுத்து அப்பகுதியில் போராட்டங்கள் வெடித்தன. இதைத்தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் சுமார் ஆயிரம் போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். போராட்டம் வெடித்தவுடன் சிறுவர்கள் சிலரும் விநாயகர் பந்தல் மீது கற்களை வீசியுள்ளனர். போலீஸார் உடனடியாக அந்த சிறுவர்களை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, சூரத் போலீஸ் கமிஷனர் அனுபம் சிங் கூறுகையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்தும் வகையில் தேவைப்பட்ட இடங்களில் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, சம்பவம் நடந்த இடத்தை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி பார்வையிட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், கல்வீச்சில் ஈடுபட்டதாக 6 பேர் மற்றும் அவர்களைத் தூண்டியதாக 27 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரத்தின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+